Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு : வுஷுவில் வெண்கலம் வென்றார் ரோஷிபினா தேவி.. இந்தியாவின் பனிரெண்டாவது பதக்கம்

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வுஷு பெண்கள் சாண்டா 60 கிலோ பிரிவின் அரையிறுதியில் போட்டியிட்ட ரோஷிபினா தேவி, சீனாவின் கை யிங்யிங்-இடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்த அரையிறுதியில், கை யிங்யிங் 1 புள்ளிகள் பெற்றார். ரோஷிபினா புள்ளிகளை பெறாத நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் வென்றால் வெள்ளி அல்லது தங்கம் கிடைக்க வாய்ப்பாக அமைந்திருக்கும்.

Asian Games 2018 - India got bronze in Wushu after Roshibina Devi lost in Semis.

நேற்று காலிறுதியில் வென்ற ரோஷிபினா இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்து இருந்தார். மேலும் மூன்று வுஷு வீரர்களும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். அதில் முதல் வீரராக ரோஷிபினா தேவி அரையிறுதியில், தோல்வி அடைந்து வெண்கலத்தை வென்று உள்ளார்.

இந்தியாவுக்கு இது பனிரெண்டாவது பதக்கமாகும். இந்தியா இதுவரை நான்கு தங்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் வென்று இருக்கிறது. இன்று மேலும் மூன்று வுஷு வீரர்கள் அரையிறுதியில் போட்டி இடுகிறார்கள்.

Story first published: Wednesday, August 22, 2018, 18:44 [IST]
Other articles published on Aug 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+