ஆசிய விளையாட்டு : வுஷுவில் இந்தியாவுக்கு இரண்டாவது வெண்கலம்… சந்தோஷ் குமார் வென்றார்
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வுஷு ஆண்கள் சாண்டா 56 கிலோ பிரிவின் அரையிறுதியில் போட்டியிட்ட சந்தோஷ் குமார், வியட்நாமின் ட்ரூஒங் கியாங்-இடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்த போட்டியில் வியட்நாம் வீரர் இரண்டு புள்ளிகள் பெற்றார். சந்தோஷ் குமார் புள்ளிகளை பெறாத நிலையில் ஆட்டம் முடிந்தது. இதன் மூலம் இன்று இரண்டாவது வுஷு வெண்கலம் கிடைத்துள்ளது.

சில நிமிடங்கள் முன்பு ரோஷிபினா தேவியும் வுஷு அரையிறுதியில் தோற்று வெண்கலம் வென்றார்.
இந்தியாவுக்கு இது பதிமூன்றாவது பதக்கமாகும். இந்தியா இதுவரை நான்கு தங்கம், மூன்று வெள்ளி, ஆறு வெண்கலம் வென்று இருக்கிறது. மேலும் இரண்டு வீரர்கள் வுஷு அரையிறுதியில் இன்று பங்கேற்க உள்ளனர்.
Story first published: Wednesday, August 22, 2018, 18:44 [IST]
Other articles published on Aug 22, 2018


Click it and Unblock the Notifications