Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு : துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்.. ரஹி ஜீவன் சர்னோபாட் அசத்தல்

Recommended Video

ஆசிய விளையாட்டு : துப்பாக்கி சுடுதலில் ரஹி ஜீவன் சர்னோபாட் ஒரு தங்கம்..

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. 25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா சார்பாக ரஹி ஜீவன் சர்னோபாட், மானு பாகர் பங்கேற்றனர்.

அந்த இறுதியில், மானு பாகர் ஆறாவது இடத்தை மட்டுமே பிடித்தார். அவர் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எதிர்பார்க்காத நிலையில், ரஹி ஜீவன் சர்னோபாட் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்திலேயே இருந்தார்.

Asian Games 2018 - India won 11th medal

இறுதியில், தாய்லாந்தின் யாங்பாய்பூன், ரஹி இருவரும் ஒரே புள்ளிகளை பெற்றதால் ஆட்டம் ஷூட்-ஆப் சென்றது. அதில் வெற்றி பெற்ற ரஹி தங்கம் வென்றார்.

[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]

துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவுக்கு இது பதினோராவது பதக்கமாகும். இந்தியா இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது. இன்று மேலும், வுஷு, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் உறுதியாக பதக்கம் கிடைக்கும் என்பதால் இந்தியாவின் பதக்கப் பட்டியல் இன்று மேலும் உயரும்.

Story first published: Wednesday, August 22, 2018, 15:10 [IST]
Other articles published on Aug 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+