ஆசிய விளையாட்டு : இந்தியாவுக்கு 4 வெண்கலம்…ஸ்குவாஷ் மற்றும் பாய்மரப் படகுப் போட்டியில் கிடைத்தது
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியாவிற்கு பாய்மரப் படகுப் போட்டியில் 3 வெண்கலம், ஸ்குவாஷ்ஷில் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது.
நேற்று இரண்டு தங்கம் வென்று தடகளத்தில் இந்தியா அசத்தியது. தடகளப் போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் மற்ற போட்டிகளும் நிறைவை ஒட்டி செல்கின்றன. அந்த வகையில் இன்று பாய்மரப் படகுப் போட்டி நிறைவு பெற்றது. அதில் இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் கிடைத்தது.

மகளிர் 49er FX பிரிவில் வர்ஷா கெளதம், ஸ்வேதா ஷேர்வாகர் ஒன்று, ஆடவர் 49er பிரிவில் வருண் அசோக் மற்றும் கணபதி கேளபண்டா ஒன்று, Open Laser 4.7 பிரிவில் ஹர்ஷிதா டோமர் ஒன்று என மூன்று வெண்கலம் வென்றது இந்தியா.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
ஸ்குவாஷ் ஆடவர் அணிப் பிரிவில் ஒரு வெண்கலம் கிடைத்தது. ஆடவர் அணி ஹாங்காங் அணியிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து வெண்கலம் மட்டுமே கிடைத்தது. மகளிர் ஸ்குவாஷ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணிக்கு வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications