ஆசிய விளையாட்டு: ஆடவர் 800மீட்டர் ஓட்டத்தில் மன்ஜித் சிங் தங்கம்… ஜின்சன் ஜான்சன் வெள்ளி
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று மாலை நடைபெற்ற ஆடவர் 800மீட்டர் ஓட்டத்தில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. முதல் இரண்டு இடங்களை பிடித்து தங்கம் மற்றும் வெள்ளி வென்றுள்ளனர் இந்திய வீரர்கள்.

ஆடவர் 800மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மன்ஜித் சிங் மற்றும் ஜின்சன் ஜான்சன் பங்கேற்றனர். அதில் மன்ஜித் சிங் போட்டி தூரத்தை 1:46.15 நிமிடத்தில் கடந்து முதல் இடத்தையும், ஜின்சன் ஜான்சன் 1:46.35 நிமிடத்தில் கடந்து இரண்டாம் இடமும் பிடித்தனர். மூன்றாம் இடத்தை கத்தாரின் அப்தல்லா அபூபக்கர் பிடித்தார்.
இதனால், ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது வரை 9 தங்கம், 18 வெள்ளி மற்றும் 22 வெண்கலம் வென்றுள்ளது.
Story first published: Tuesday, August 28, 2018, 19:01 [IST]
Other articles published on Aug 28, 2018


Click it and Unblock the Notifications