ஆசிய விளையாட்டு: குராஷ் விளையாட்டில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது
ஜகார்த்தா : மகளிர் பிரிவு குராஷ் விளையாட்டில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது. இந்தியா சார்பில் பங்கேற்ற பிங்கி பல்ஹாரா வெள்ளியும், மலப்ரபா யல்லப்பா வெண்கலமும் வென்றனர்.
மகளிர் 52 கிலோ எடைப் பிரிவு குராஷ் விளையாட்டில் அரையிறுதியில் மலப்ரபா யல்லப்பா உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் வெண்கலம் வென்றார் அவர்.

அடுத்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிங்கி பல்ஹாராவும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இரண்டாம் இடம் பிடித்த இவர் வெள்ளி வென்றார்.
இந்தியா சற்று முன், ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்திலும் இரண்டு பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி ஆகும். இன்று தொடர்ந்து தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஹீமா தாஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
Story first published: Tuesday, August 28, 2018, 19:40 [IST]
Other articles published on Aug 28, 2018


Click it and Unblock the Notifications