Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு : கலப்பு 4 x 400 மீட்டர் ரிலே ரேஸில் இந்தியா வெள்ளி வென்றது

ஜகார்த்தா : இன்று மாலை ஆசிய விளையாட்டில் நடைபெற்ற கலப்பு அணி 4 x 400 மீட்டர் ரிலே ரேஸில் இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்தது. இதில் இந்த ஆசிய விளையாட்டில் ஏற்கனவே பதக்கம் வென்ற ஹீமா தாஸ், முகம்மது ஏனாஸ் ஆகியோர் இந்திய நால்வர் அணியில் பங்கு பெற்றனர்.

கலப்பு அணி ரிலே ரேஸ் இறுதிப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன. அதில், பஹ்ரைன் முதல் இடம் பிடித்ததோடு, 3:11.89 நிமிடங்களில் ஓடி உலக சாதனையும் நிகழ்த்தி உள்ளது.

Asian Games 2018 - India won silver in Mixed 4 x 400m Relay race

நான்கு பேர் கொண்ட கலப்பு ரிலே அணியில் முகம்மது ஏனாஸ், பூவம்மா, ஹீமா தாஸ், ஆரோக்யா ராஜீவ் இந்தியா சார்பாக பங்கேற்றனர். இதில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்ற இந்தியா 3:15.71 நிமிடங்களில் போட்டி தூரத்தை அடைந்தது. மூன்றாம் இடத்தை கஜகஸ்தான் பிடித்தது.

இந்த போட்டியில் வென்ற பதக்கத்தோடு இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 50-ஐ எட்டியுள்ளது. இந்தியா இதுவரை 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் வென்று இருக்கிறது.

Story first published: Tuesday, August 28, 2018, 19:58 [IST]
Other articles published on Aug 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+