For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு: இன்று 10ஆம் நாள்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?

ஜகார்த்தா : இன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பத்தாவது நாளாக இந்தியா பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இன்று முக்கியமாக மகளிர் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து பங்கேற்க உள்ளார்.

நேற்று இந்தியா ஈட்டி எறிதலில் ஒரு தங்கம் வென்று அசத்தியது. நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பிடித்த போட்டியாளரை விட 5 மீட்டருக்கும் அதிக தூரம் வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இன்று பத்தாம் நாள் ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டி விவரங்களை கீழே காணலாம்.

Asian Games 2018 - Indian contingent games schedule for Day 10 here

தடகளம்

காலை 7.30 முதல் - மகளிர் ஹெப்தலான் - ஸ்வப்னா பர்மான், பூர்ணிமா

காலை 8.15 முதல் - மகளிர் 200மீட்டர் தகுதிச் சுற்று - ஹீமா தாஸ், டுட்டீ சந்த்

மாலை 5.55 - மகளிர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று - அன்னு ராணி

மாலை 6.10 - ஆடவர் 800 மீட்டர் இறுதிச் சுற்று - ஜின்சன் ஜான்சன், மஞ்சித் சிங்

மாலை 6.20 - மகளிர் 5000 மீட்டர் இறுதிச் சுற்று - சூர்யா, சஞ்சிவனி பாபுராவ்

மாலை 7.15 - ஆடவர் 4 x 400 ரிலே இறுதிச் சுற்று

வில்வித்தை

காலை 11.15 - மகளிர் காம்பவுண்ட் அணி இறுதிச் சுற்று - இந்தியா x கொரியா

மதியம் 12.05 - ஆடவர் காம்பவுண்ட் அணி இறுதிச் சுற்று - இந்தியா x கொரியா

பாட்மிண்டன்

காலை 11.40 - மகளிர் ஒற்றையர் இறுதி - பி.வி.சிந்து

குத்துச்சண்டை

மதியம் 1.00 - மகளிர் ஃபெதர்வெயிட் 57 கிலோ காலிறுதி - சோனியா லாதேர்

மதியம் 1.45 - மகளிர் லைட்வெயிட் 60 கிலோ காலிறுதி - பவித்ரா

பிரிட்ஜ்

காலை 8.00 முதல் - கலப்பு இணை தகுதிச் சுற்று

காலை 8.30 முதல் - ஆடவர் இணை தகுதிச் சுற்று

காலை 8.30 முதல் - மகளிர் இணை தகுதிச் சுற்று

சைக்ளிங்

காலை 7.30 முதல் - மகளிர் கேய்ரின் - டெபோரா, சோனாலி சானு

காலை 7.48 முதல் - மகளிர் அணி பர்சூட்

ஈகுவெஸ்டேரியன்

காலை 6.30 - ஜம்பிங் தனி மற்றும் அணிப் பிரிவு

ஹாக்கி

மதியம் 2.30 - ஆடவர் பிரிவு - இந்தியா x இலங்கை

குராஷ்

மதியம் 12.30 - ஆடவர் 66 கிலோ - ஜடின், ஜாக்கி கஹ்லோட்

மதியம் 12.30 - ஆடவர் 90 கிலோ - அஸ்வின் சந்திரன், பரிட்சித் குமார்

மதியம் 12.30 - மகளிர் 52 கிலோ - மலப்ரபா எல்லப்பா, பின்கி பல்ஹாரா

செபக்டக்ராவ்

மதியம் 12.30 - மகளிர் குரூப் சுற்று - இந்தியா x ஜப்பான்

ஸ்குவாஷ்

காலை 8.30 - மகளிர் பிரிவு - இந்தியா x தாய்லாந்து

மாலை 5.00 - மகளிர் பிரிவு - இந்தியா x இந்தோனேசியா

மதியம் 2.30 - ஆடவர் பிரிவு - இந்தியா x கத்தார்

டேபிள் டென்னிஸ்

காலை 11.00 முதல் - ஆடவர் அரையிறுதி - இந்தியா x தென்கொரியா

வாலிபால்

காலை 11.00 - ஆடவர் அணி - இந்தியா x பாகிஸ்தான்

Story first published: Tuesday, August 28, 2018, 9:05 [IST]
Other articles published on Aug 28, 2018
English summary
Asian Games 2018 - Indian contingent games schedule for Day 10 here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+