Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு: இன்று 12ஆம் நாள்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?

ஜகார்த்தா : பதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா நேற்று இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியது. ட்ரிபுள் ஜம்ப்பில் அர்பிந்தர் சிங் ஒரு தங்கமும், மகளிர் ஹெப்டாத்லான் போட்டியில் ஸ்வப்னா பர்மன் ஒரு தங்கமும் வென்று இந்தியாவை தலை நிமிரச் செய்தனர்.

அது மட்டுமில்லாமல், நேற்று வென்ற இரண்டாவது தங்கத்தோடு இந்தியாவின் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்க எண்ணிக்கை 150-ஐ எட்டியது.

Asian Games 2018 - Indian contingent games schedule for Day 12 here

இன்று 12ஆம் நாள், இந்தியா டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டிகள், ரிலே ரேஸ் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இன்றோடு தடகள போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

இன்றைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டி அட்டவணையை கீழே காணலாம்.

தடகளம்

காலை 4.30 - ஆடவர் 50 கிலோமீட்டர் நடை இறுதிப் போட்டி - சந்தீப் குமார்

மாலை 5.10 - மகளிர் டிஸ்கஸ் த்ரோ இறுதிப் போட்டி - சீமா புனியா, சந்தீப் குமாரி

மாலை 5.50 - மகளிர் 1500 மீட்டர் இறுதிப் போட்டி - சித்ரா, மோனிகா சவுத்ரி

மாலை 6.05 - ஆடவர் 1500 மீட்டர் இறுதிப் போட்டி - மன்ஜித் சிங், ஜின்சன் ஜான்சன்

மாலை 6.30 - ஆடவர் 5000 மீட்டர் இறுதிப் போட்டி - லக்ஷ்மணன்

மாலை 6.50 - மகளிர் 4 x ரிலே ரேஸ் இறுதிப் போட்டி

மாலை 7.10 - ஆடவர் 4 x ரிலே ரேஸ் இறுதிப் போட்டி

ஹாக்கி

மாலை 4.00 - ஆடவர் ஹாக்கி அரையிறுதி - இந்தியா x மலேசியா

டேபிள் டென்னிஸ்

காலை 10.45 - மகளிர் ஒற்றையர் - மௌமா தாஸ்

மதியம் 2.00 - ஆடவர் ஒற்றையர் - சரத் கமல்

மாலை 6.45 - மகளிர் ஒற்றையர் - மனிகா பத்ரா

மாலை 7.30 - ஆடவர் ஒற்றையர் - சத்தியன்

ஸ்குவாஷ்

காலை 9.30 - மகளிர் அணி பிரிவு - இந்தியா x ஹாங்காங்

கேனோ / காயக்

காலை 7.10 - ஆடவர் காயக் நால்வர் பிரிவு (K4) 500 மீட்டர் - இறுதிப் போட்டி

காலை 7.20 - மகளிர் காயக் ஒற்றையர் (K1) 500 மீட்டர் - இறுதிப் போட்டி - சோனியா தேவி

காலை 8.40 - ஆடவர் காயக் இரட்டையர் (K2) 1000 மீட்டர் - இறுதிப் போட்டி

காலை 9.10 - ஆடவர் கேனோ இரட்டையர் (C2) 1000 மீட்டர் - இறுதிப் போட்டி

ஜூடோ

காலை 7.50 - ஆடவர் 81 கிலோ தகுதி நீக்க சுற்று - ஹர்ஷ்தீப் சிங்

காலை 9.20 - மகளிர் 70 கிலோ தகுதி நீக்க சுற்று - கரிமா சவுத்ரி

சைக்ளிங் ட்ராக்

காலை 7.30 - ஆடவர் ஆம்னியம் - மஞ்ஜித் சிங்

காலை 7.50 - மகளிர் ஸ்பிரின்ட் தகுதிச் சுற்று

காலை 8.26 - மகளிர் 3000 மீட்டர் தனிப் பிரிவு பர்சூட்

குராஷ்

மதியம் 12.30 - மகளிர் 78 கிலோ - 32 நபர்கள் சுற்று

மதியம் 12.36 - ஆடவர் 90 கிலோ - 32 நபர்கள் சுற்று

மதியம் 1.00க்கு பின் - மகளிர் 78 கிலோ - 16 நபர்கள் சுற்று

மதியம் 1.30க்கு பின் - ஆடவர் 90 கிலோ - 16 நபர்கள் சுற்று

செபக்டக்ராவ்

மதியம் 3.00 - மகளிர் குரூப் சுற்று - இந்தியா x தாய்லாந்து

பிரிட்ஜ்

காலை 8.00 - கலப்பு இணை தகுதி - அரையிறுதி

காலை 8.30 - ஆடவர் இணை தகுதி - அரையிறுதி

காலை 8.30 - மகளிர் இணை தகுதி - அரையிறுதி

டைவிங்

மதியம் 12.50 - ஆடவர் 1மீட்டர் ஸ்ப்ரிங்போர்டு - ராமானந்த ஷர்மா

ஈகுவெஸ்டேரியன்

காலை 6.3௦ - ஜம்பிங் தனிப் பிரிவு - இறுதிச் சுற்று 1

மதியம் 1.30 - ஜம்பிங் தனிப் பிரிவு - இறுதிச் சுற்று 2

Story first published: Thursday, August 30, 2018, 9:34 [IST]
Other articles published on Aug 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+