ஆசிய விளையாட்டு : இன்று 14ஆம் நாள்..இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இந்திய வீரர்களின் விளையாட்டுக்கள் இன்றோடு முடிவுக்கு வருவதாக தெரிகிறது. நாளை ஆசிய போட்டிகள் முழுவதுமாக முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று 14ஆம் நாள் இந்தியா, குத்துச்சண்டை இறுதி, மகளிர் அணி ஸ்குவாஷ் இறுதி, பிரிட்ஜ் போட்டிகளில் மூன்று பிரிவுகளில் இறுதிப் போட்டி என பங்கேற்க உள்ளதால் இன்றும் பல பதக்கங்கள் கிடைக்கும். குறிப்பாக தங்கம், வெள்ளி ஆகியவை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

மற்றொரு முக்கிய போட்டியாக இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்கும் வெண்கலப் பதக்கத்துக்கான ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இன்று இந்தியா பங்கேற்க உள்ள போட்டிகளின் அட்டவணையை காணலாம்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
குத்துச்சண்டை
- மதியம் 12.30 - ஆடவர் லைட்வெயிட் பிளை 49 கிலோ பிரிவு - அமித் பங்கால்
ஸ்குவாஷ்
- மதியம் 1.30 - மகளிர் அணி - இறுதிப் போட்டி - இந்தியா x ஹாங்காங்
ஹாக்கி
- மாலை 4.00 - ஆடவர் பிரிவு வெண்கலத்துக்கான போட்டி - இந்தியா x பாகிஸ்தான்
பிரிட்ஜ்
- காலை 8.30 - ஆடவர் இணை - இறுதிப் போட்டி
- காலை 8.30 - மகளிர் இணை - இறுதிப் போட்டி
- காலை 8.30 - கலப்பு இணை - இறுதிப் போட்டி
கேனோ / காயக்
- காலை 7.30 - கேனோ இரட்டையர் 200 மீட்டர் ஆடவர் பிரிவு - இறுதிப் போட்டி
- காலை 10.00 - காயக் நால்வர் 500 மீட்டர் மகளிர் பிரிவு - இறுதிப் போட்டி
ஜூடோ
- காலை 7.30க்கு பின் - கலப்பு அணி - தகுதி நீக்கச் சுற்று - இந்தியா x நேபால்
- காலை 8.40 முதல் - கலப்பு அணி காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்
டைவிங்
- மதியம் 12.45 - ஆடவர் 10 மீட்டர் நடைமேடை - முதன்மை சுற்று
Story first published: Saturday, September 1, 2018, 11:01 [IST]
Other articles published on Sep 1, 2018


Click it and Unblock the Notifications