ஆசிய விளையாட்டு: இன்று 9ஆம் நாள்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?
ஜகார்த்தா: இந்தியா நேற்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் பெற்று அசத்தியது. அதில் ஐந்து வெள்ளி, இரண்டு வெண்கலம். தடகளத்தில் ஹீமா தாஸ், முஹம்மது ஏனாஸ், டுட்டீ சந்த் ஆகியோர் அடுத்தடுத்து வெள்ளிகளை வென்று இந்தியாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
தமிழக வீரரான கோவிந்தன் லக்ஷ்மணன், நேற்று 10000மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. பின், அவர் திடீரென்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் ஓடும்போது வெள்ளைக் கோட்டுக்கு வெளியே ஒரு முறை காலை வைத்துவிட்டார் என்ற காரணத்துக்காக அவரது வெண்கலம் பறிக்கப்பட்டது. இந்தியா சார்பில் இதை எதிர்த்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒன்பதாம் நாள் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் குறித்து கீழே காணலாம்.
தடகளம்
- மாலை 5.10 - மகளிர் நீளம் தாண்டுதல் இறுதிச் சுற்று - நீனா வராகில், நயனா ஜேம்ஸ்
- மாலை 5.15 - ஆடவர் ஜாவெலின் த்ரோ இறுதிச் சுற்று - நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங்
- மாலை 5.15 - மகளிர் 400மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இறுதிச் சுற்று - ஜவுனா முர்மு, அனு ராகவன்
- மாலை 5.30 - ஆடவர் 400மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இறுதிச் சுற்று - தருண் அய்யாசாமி, சந்தோஷ் குமார்
- மாலை 5.30 - ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதிச் சுற்று - சேத்தன் பாலசுப்ரமண்யா
- மாலை 5.45 - மகளிர் 3000மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிச் சுற்று - சுதா சிங், சிந்தா யாதவ்
- மாலை 6.00 - ஆடவர் 3000மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிச் சுற்று - ஷங்கர் லால் சுவாமி
- மாலை 6.00 - ஆடவர் 800 மீட்டர் தகுதிச் சுற்று - ஜின்சன் ஜான்சன், மஞ்சித் சிங்
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
பாட்மிண்டன்
- காலை 10.30 - மகளிர் ஒற்றையர் அரையிறுதி - சாய்னா நேவால் காலை 10.30க்கு பின் - மகளிர் ஒற்றையர் அரையிறுதி - பி.வி.சிந்து
ஹாக்கி
- மதியம் 12.30 - மகளிர் பிரிவு - இந்தியா x தாய்லாந்து
குத்துச்சண்டை
- மாலை 5.15 - ஆடவர் லைட்வெயிட் 49 கிலோ - 16 நபர்கள் சுற்று -அமித்
- மாலை 6.15 - ஆடவர் பாண்டம் 56 கிலோ - 16 நபர்கள் சுற்று - முகம்மது ஹுசம் உத்தின்
- மாலை 7.00 - ஆடவர் லைட்வெல்டர் 64 கிலோ - 16 நபர்கள் சுற்று - தீரஜ்
- மதியம் 3.00 - ஆடவர் மிடில்வெயிட் 75 கிலோ - 16 நபர்கள் சுற்று - விகாஸ் கிருஷ்ணன்
டேபிள் டென்னிஸ்
- காலை 10.30 - ஆடவர் அணி - குரூப் சுற்று - இந்தியா x மக்காவு
- மதியம் 2.30 - ஆடவர் அணி - குரூப் சுற்று - இந்தியா x வியட்நாம்
- மாலை 4.30 - மகளிர் அணி - குரூப் சுற்று காலிறுதி
- மாலை 6.30 - ஆடவர் அணி - குரூப் சுற்று காலிறுதி
ஸ்குவாஷ்
- காலை 11.00 - ஆடவர் அணி பிரிவு - இந்தியா x இந்தோனேசியா
- மாலை 5.00 - ஆடவர் அணி பிரிவு - இந்தியா x சிங்கப்பூர்
- காலை 11.00 - மகளிர் அணி பிரிவு - இந்தியா x ஈரான்
வாலிபால்
- காலை 11.00 - மகளிர் குரூப் சுற்று - இந்தியா x சீனா
கேனோ
- காலை 8.30 - ஆடவர் கேனோ TBR 1000 மீட்டர் - ஹீட் 1
- காலை 9.40 - ஆடவர் கேனோ TBR 1000 மீட்டர் - ரெபேசேஜ்
- காலை 10.40 - ஆடவர் கேனோ TBR 1000 மீட்டர் - அரையிறுதி
- மதியம் 12.40 - ஆடவர் கேனோ TBR 1000 மீட்டர் - இறுதி
சைக்ளிங் ட்ராக்
- காலை 11.30 - மகளிர் அணி ஸ்பிரின்ட் - தகுதிச் சுற்று
- காலை 11.45 - ஆடவர் அணி ஸ்பிரின்ட் - தகுதிச் சுற்று
- மதியம் 12.00 - மகளிர் அணி பர்சூட் - தகுதிச் சுற்று
- மதியம் 12.40 - ஆடவர் அணி பர்சூட் - தகுதிச் சுற்று
- மதியம் 2.00 - ஆடவர் அணி ஸ்பிரின்ட் - இறுதிச் சுற்று
- மதியம் 2.15 - மகளிர் அணி ஸ்பிரின்ட் - இறுதிச் சுற்று
ஈகுவெஸ்டேரியன்
- காலை 6.30 - ஜம்பிங் தனிப் பிரிவு - முதல் தகுதிச் சுற்று
- காலை 6.30 - ஜம்பிங் அணிப் பிரிவு - முதல் தகுதிச் சுற்று
பாய்மரப் படகுப் போட்டி
- காலை 10.40 - Mixed RS One
செபக்டக்ராவ்
- காலை 9.30 - ஆடவர் ரேகு - இந்தியா x நேபாள்


Click it and Unblock the Notifications