Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு : வில்வித்தையில் இரண்டாவது வெள்ளி.... முதலில் மகளிர் அணி, அடுத்து ஆடவர் அணி

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டு வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் மகளிர் அணியைத் தொடர்ந்து, ஆடவர் அணியும் வெள்ளி வென்றுள்ளது. ஆடவர் அணி வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் கொரியாவை சந்தித்தது. அதில் தோல்வி அடைந்து வெள்ளி வென்றது.

இந்திய அணி சார்பில் ரஜத் சவுஹன், அமான் சைனி, அபிஷேக் வர்மா ஆகியோர் பங்கேற்றனர். கொரியா அணியும், இந்தியா அணியும் நான்கு செட் முடிவில் 229 - 229 என புள்ளிகளில் சமநிலையை எட்டியதால் ஆட்டம், ஷூட்-ஆப் சென்றது.

Asian Games 2018 – Indian men archers brought silver in Compound final after women archers

அதிலும், இரண்டு அணிகளும் சம நிலையை எட்டியதால், அதிக முறை "X" குறியீட்டில் அம்பெய்திய அடிப்படையில் கொரியா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணி 7 முறை "X" குறியீட்டில் அம்பு எய்தி இருந்தது. இந்தியா மூன்று முறை மட்டுமே எய்தது.

இன்று இரண்டாவது வெள்ளி வென்றுள்ளது இந்தியா. அடுத்து இன்னும் பல போட்டிகள் நடைபெற உள்ளதால் இந்தியா இன்று அதிக பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, August 28, 2018, 12:59 [IST]
Other articles published on Aug 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+