Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு : மகளிர் வில்வித்தையில் வெள்ளி.... 10ஆம் நாள் பதக்க வேட்டை ஆரம்பம்

ஜகார்த்தா : இந்திய வில்வித்தை மகளிர் காம்பவுண்ட் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளியை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு இது தான் முதல் பதக்கம்.

ஆசிய விளையாட்டில் இன்று மகளிர் வில்வித்தை காம்பவுண்ட் அணிப் பிரவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவும் கொரியாவும் மோதின. இந்திய அணியில் கிரார் முஸ்கான், குமாரி மதுமிதா, வென்னாம் ஜோதி சுரேகா ஆகியோர் பங்கேற்றனர்.

Asian Games 2018 – Indian women archers brought silver in Compound final

இரண்டு அணியுமே நெருக்கமான புள்ளிகளை பெற்றன. முதல் செட்டை இந்தியா 59-57 என கைப்பற்றியது. இரண்டாம் செட்டை கொரியா 58-56 என கைப்பற்றியது. மூன்றாம் செட் 58-58 என சம நிலையில் முடிந்தது.

நான்காம் செட்டில் வென்றால் தங்கம் வெல்லலாம் என்ற சூழ்நிலையில், இந்தியா 55-58 என தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி மட்டுமே கிடைத்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018

இன்று பத்தாம் நாளை எட்டி உள்ள ஆசிய போட்டிகளில, இந்தியா இதுவரை 42 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் எட்டு மட்டுமே தங்கப் பதக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அடுத்து பி.வி.சிந்து ஆடவுள்ள பாட்மிண்டன் இறுதிப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதில் வென்றாலும், தோற்றாலும் பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 28, 2018, 12:11 [IST]
Other articles published on Aug 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+