ஆசிய விளையாட்டு : ஜோஷ்னா சின்னப்பா அரையிறுதியில் தோற்று வெண்கலம் வென்றார்..இன்று 2வது பதக்கம்
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இரண்டாவது ஸ்குவாஷ் மகளிர் அரையிறுதி தோல்வியை சந்தித்துள்ளது இந்தியா. சற்று முன், தீபிகா பல்லிகல் அரையிறுதியில் தோற்று வெண்கலம் மட்டும் வென்று ஆறுதல் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியத்தை சந்தித்தார். அந்த போட்டியில் 1-3 என தோல்வி அடைந்தார் ஜோஷ்னா.

தீபிகா ஏற்கனவே மலேசியாவின் நிக்கோல் டேவிட்-இடம் தோற்று இருந்தார். இதனால், ஸ்குவாஷ் இறுதியில் இரண்டு மலேசியர்கள் மோத உள்ளனர். மலேசியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெள்ளி உறுதியாகி உள்ளது.
இந்தியா இரண்டு வெண்கலம் மட்டும் பெற்று ஸ்குவாஷ் மகளிர் பிரிவில் ஆறுதல் அடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அடுத்து சௌரவ் கோஷல் ஆடவர் அரையிறுதியில் பங்கேற்க உள்ளார். அவராவது, இறுதிப் போட்டிக்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications