ஆசிய விளையாட்டு: மகளிர் நீளம் தாண்டுதலில் நீனா வாராகில் வெள்ளி…. தடகளத்தில் பதக்க மழை
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் நீளம் தாண்டுதலில் நீனா வாராகில் வெள்ளி வென்றார். கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் தடகளப் போட்டிகளில் இதுவரை இந்தியா எட்டு பதக்கங்களை பெற்றுள்ளது.
மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நீனா வாராகில் மற்றும் நயனா ஜேம்ஸ் பங்கேற்றனர். இந்த போட்டியின் முடிவில் வியட்நாமின் புயி தி து முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். அவர் 6.55 மீட்டர் தாண்டினார். அடுத்த இடத்தில் இந்தியாவின் நீனா வாராகில் 6.51 மீட்டர் தாண்டி வெள்ளி வென்றார். நயனா ஜேம்ஸ் பத்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இந்தியாவுக்கு இது 13வது வெள்ளியாகும். பதக்கப் பட்டியலில் பின்தங்கி இருந்த இந்தியா, தடகளத்தின் துணையால் இரண்டு தங்கம், ஆறு வெள்ளி வென்று சிறிது முன்னேறியுள்ளது. இன்று இந்தியா தடகளத்தில் 3 வெள்ளி மற்றும் 1 தங்கம் வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications