Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு : டென்னிஸில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் வெண்கலம் வென்றார்… அரையிறுதியில் தோல்வி

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். இதனால், காலிறுதி வெற்றியின் மூலம் வெண்கலம் மட்டுமே கிடைத்தது.

ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் அரையிறுதியில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், உஸ்பெகிஸ்தானின் இஸ்டோமின் டெனிஸ்-ஐ சந்தித்தார். துவக்கம் முதலே பின் தங்கி வந்த பிரஜ்னேஷ், முதல் செட்டை 2-6 என இழந்தார். இரண்டாவது செட்டிலும் அவர் ஆட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அந்த செட்டையும் 2-6 என இழந்தார்.

Asian Games 2018 - Prajnesh Gunneswaran won bronze afte losing the men singles semifinal match

இந்த தோல்வியின் காரணமாக வெண்கலம் மட்டுமே கிடைத்தது. டென்னிஸில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா வெண்கலப் பதக்கம் வென்றார். இன்று ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணா, திவிஜ் சரண் இணை தங்கம் வென்றது. இதையடுத்து, டென்னிஸில் மூன்றாவது பதக்கமாக இந்த வெண்கலம் கிடைத்துள்ளது.

[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]

இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 14 வெண்கலம் வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் தற்போது எட்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, தங்கப் பதக்கங்கள் வென்றால் மட்டுமே முன்னேற முடியும்.

Story first published: Friday, August 24, 2018, 18:07 [IST]
Other articles published on Aug 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+