ஆசிய விளையாட்டு : சுதா சிங் வெள்ளி வென்றார்….. தடகளத்தில் இந்தியாவுக்கு ஐந்தாவது வெள்ளி
ஜகார்த்தா: தடகளத்தில் மகளிர் ஸ்டீபிள்சேஸ் 3000மீட்டர் விளையாட்டில் இந்தியாவின் சுதா சிங் இரண்டாம் பித்து வெள்ளியை தட்டிச் சென்றார். இவர் ஏற்கனவே 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஸ்டீபிள்சேஸ் 3000மீட்டர் போட்டியில் பஹ்ரைனின் யாவி வின்பிரேட் முதல் இடத்தையும் (9:36.52 நிமிடங்கள்), சுதா சிங் இரண்டாம் இடத்தையும் (9:40.03 நிமிடங்கள்), வியட்நாமின் என்குஎன் மூன்றாம் இடத்தையும் (9:43.83 நிமிடங்கள்) பிடித்தனர்.

இந்தியாவுக்கு தடகளத்தில் மட்டும் கிடக்கும் ஐந்தாவது வெள்ளிப் பதக்கமாகும். இன்று தடகளத்தில் சற்று முன், தமிழக வீரர் தருண் அய்யாசாமி ஆடவர் 400மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளி வென்றார்.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
இந்தியா இதுவரை 39 பதக்கங்கள் வென்று இருக்கிறது. இதில் ஏழு தங்கம் மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications