For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு : மகளிர் ஹாக்கியில் இந்தியா வெள்ளி..ஜப்பான் அணியிடம் தங்கத்தை இழந்தது

ஜகார்த்தா: மகளிர் ஹாக்கி போட்டி இறுதிப் போட்டி சற்று முன் முடிவடைந்தது. இந்திய மகளிர் அணி ஜப்பானிடம் 1-2 என தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.

மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஜப்பான் முதலில் இருந்தே முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் முதல் கால் பகுதியில் ஒரு கோல் அடித்தது ஜப்பான். இந்திய அணி இரண்டாம் கால் பகுதியின் கடைசி சில நிமிடங்களில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சம நிலைக்கு எடுத்து வந்தது.

Asian Games 2018 - Women Hockey failed against Japan in finals and bags silver

ஆட்டத்தின் மூன்றாவது கால் பகுதியில் ஜப்பான் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கோல் அடிக்க, ஆட்டம் 2-1 என மாறியது. ஆட்ட நேரம் முடியும் வரை இந்தியாவால் கோல் அடிக்க முடியாமல் செல்ல, ஜப்பான் 2-1 என வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது.

இந்தியா வெள்ளி மட்டுமே வென்றது. ஆடவர் ஹாக்கி அணி நேற்று அரையிறுதியில் தோற்றது. வெண்கலத்துக்கான போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா இந்த வெள்ளி தவிர்த்து இன்று ஐந்து வெண்கலங்கள் வென்றது.

இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் காயத்தோடு இருந்ததால் அரையிறுதியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், அரையிறுதி வரை தகுதி பெற்றதால் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 31, 2018, 20:52 [IST]
Other articles published on Aug 31, 2018
English summary
Asian Games 2018 - Women Hockey failed against Japan in finals and bags silver
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+