For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Asian games 2023 - கால்பந்தில் சீனாவிடம் உதை வாங்கிய இந்தியா.. வாலிபாலில் முதல் ஆட்டத்தில் வெற்றி

ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டி வரும் 23ஆம் தேதி முதல் சீனாவின் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறுகிறது. இந்த நிலையில் கால்பந்து வாலிபால் போன்ற சில அணி விளையாட்டுகள் தற்போது இருந்து நடைபெறுகிறது.

இதில் கால்பந்து போட்டியில் 23 அணிகள் முதல் சுற்றில் பங்கேற்கிறது. இதில் ஐந்து பிரிவுகளில் நான்கு அணியும் ஒரு பிரிவில் மூன்று அணிகளும் இடம்பெற்றுள்ளன.

Asian Games 2023 - India loses to china n football and wins cambodia in volleyball

இதில் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து முதல் இரண்டு அணிகளும் நான்கு சிறந்த மூன்றாவது இடத்தை பிடித்த அணிகளும் ரவுண்ட் ஆஃப் 16 க்கு தகுதி பெறும். இந்த நிலையில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது. இதில் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சீன வீரர்கள் அதிரடியாக விளையாடி கோல்களை போட முயன்றனர். ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் குருமித் ஒரு கோலை தடுத்தார்.

அதேபோன்று ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் கோல் போடும் வாய்ப்பை சுனில் செற்றி வீணடித்தார். இதிலிருந்து ஆட்டத்தின் 17 வது நிமிடத்தில் சீன வீரர் காவோ முதல் கோலை அடித்தார். இதேபோன்று ஆட்டத்தின் 23ஆம் நிமிடத்தில் சீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் அது தவற விட்டது.

இப்படி ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல இந்திய வீரர் ராகுல் ஆட்டத்தின் முதல் பாதியில் வழங்கப்பட்ட கூடுதல் நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இந்த நிலையில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் சீனா இரண்டாவது கோலை அடித்து முன்னிலை பெற்றது. இதனை மீண்டும் சமன் செய்ய இந்தியா கடுமையாக போராடிய நிலையில். சீனா இறுதிக்கட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தது அடுத்தடுத்து கோல்களை அடித்தது, இதன் மூலம் ஆட்டம் 5க்கு1 என்ற கணக்கில் சீன அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி வாலிபாலில் கடந்த 37 ஆண்டுகளாக எந்த ஒரு பதக்கத்தையும் இல்லாமல் இருக்கிறது. 1958 ஆம் ஆண்டு முதல் முறையாக பெண்களும் வென்ற இந்திய வாலிபால் அணி 1962 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. அதன் பிறகு 1986 ஆம் ஆண்டு தான் வெண்கலம் வென்றது.

ஆனால் இதன் பிறகு இந்தியா எந்த பதக்கத்தையும் வாலிபாலில் வாங்கவில்லை. இந்த நிலையில் இந்திய அணி கம்போடியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 25க்கு 14, 25க்கு 13, 25க்கு 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி நாளை தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

Story first published: Tuesday, September 19, 2023, 19:36 [IST]
Other articles published on Sep 19, 2023
English summary
Asian Games 2023 - India loses to china n football and wins cambodia in volleyball ஆசிய போட்டி 2023 - கால்பந்தில் சீனாவிடம் உதை வாங்கிய இந்தியா.. வாலிபாலில் முதல் ஆட்டத்தில் வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+