For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு போட்டி செப்.19இல் இந்தியா ஆடும் போட்டிகள் விவரம்.. எங்கே பார்ப்பது?

ஹாங்சோ : சீனாவின் ஹாங்சோ நகரில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 39 விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ளன. இந்த முறை இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டுப் பிரிவில் முதன்முறையாக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Asian Games 2023 : India matches on September 19 - Football and Volleyball

இதில் சில போட்டிகள் மட்டும் செப்டம்பர் 19 முதலே துவங்க உள்ளன. அதில் இந்தியா ஆடும் இரண்டு போட்டிகளும் அடக்கம்.

கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகளில் இந்தியா செப்டம்பர் 19 அன்றே பங்கேற்க உள்ளது.

இதில் இந்திய ஆடவர் கால்பந்து அணி குரூப் ஏ பிரிவில் பங்கேற்று உள்ளது. அந்த பிரிவில் இந்திய அணியுடன், சீனா, மியான்மர் மற்றும் வங்கதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்திய ஆடவர் வாலிபால் அணி குரூப் சி பிரிவில் பங்கேற்று உள்ளது. அந்த பிரிவில் இந்திய அணியுடன், கொரியா மற்றும் கம்போடியா அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஆடவர் கால்பந்து போட்டி துவக்க நேரம் :

ஆடவர் கால்பந்து - இந்தியா - சீனா - நேரம் : மாலை : 5.00 மணி

ஆடவர் வாலிபால் போட்டி துவக்க நேரம் :

ஆடவர் வாலிபால் - இந்தியா - கம்போடியா - நேரம் : மாலை : 4.30 மணி

இந்த போட்டிகளை எங்கே காண்பது?

ஆடவர் கால்பந்து போட்டிகள் இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 HD மற்றும் SD தொலைக்காட்சியில் காணலாம். சோனி லைவ் ஆப் மற்றும் இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் காணலாம்.

ஆடவர் வாலிபால் போட்டி இந்தியாவில் எந்த தொலைக்காட்சியிலும் காண முடியாது. ஆசிய விளையாட்டுப் போட்டி இணையதளத்தில் அந்த போட்டி நடக்கும் போது அது குறித்த தகவல்களை அறியலாம்.

Story first published: Tuesday, September 19, 2023, 11:17 [IST]
Other articles published on Sep 19, 2023
English summary
Asian Games 2023 : India matches on September 19. India going to play Football and Volleyball today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+