Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 பதக்கங்களை அள்ளிய இந்தியா.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலக்கும் வீரர், வீராங்கனைகள்

ஹாங்சோ : 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை வேட்டையாடி வருகிறது. முதல் நாளில் இந்தியா மதியம் வரை 5 பதக்கங்களை வென்று இருந்தது.

படகோட்டுதல் பிரிவில் மட்டும் இந்தியா மூன்று பதக்கங்களை அள்ளி இருக்கிறது. முன்னதாக அதிகாலையில் படகோட்டுதல் விளையாட்டில் லைட்வெயிட் ஆடவர் இரட்டை ஸ்கல்ஸ் பிரிவில் வெள்ளி வென்றது இந்தியா.

Asian Games 2023 : India won 4 medals with 3 coming from Rowing

அதைத் தொடர்ந்து படகோட்டுதல் ஆடவர் இணைப் பிரிவில் பாபு லால் யாதவ், லேக் ராம் வெண்கலம் வென்றனர். இந்த இணை 6.50.41 நேரத்தில் போட்டி தூரத்தை கடந்து மூன்றாவது இடம் பிடித்தது. அதன் மூலம், இந்தியா வெண்கலம் வென்றது. இதே பிரிவில் ஹாங்காங் தங்கம் வென்றது. உஸ்பெகிஸ்தான் வெள்ளி வென்றது.

படகோட்டுதல் ஆடவர் எட்டு பேர் பிரிவில் இந்திய அணி 5.43.௦௧ நேரத்தில் போட்டி தூரத்தை கடந்து இரண்டாம் இடம் பிடித்தது. அதன் மூலம், இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இதே பிரிவில் சீனா தங்கம் வென்றது. இந்தோனேசியா வெண்கலம் வென்றது.

முன்னதாக துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைஃபிள் மகளிர் குழு பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இதுவே இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும்.

அடுத்து துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைஃபிள் மகளிர் குழு பிரிவில் வெள்ளி வென்ற ரமிதா, தனி நபர் பிரிவில் வெண்கலம் வென்றார்.

இத்துடன் இந்தியா மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் வென்றுள்ளது. படகோட்டுதலில் மட்டும் மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதால் அதிலும் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதி ஆகி உள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால் தங்கம் கிடைக்கும். தோல்வி அடைந்தால் வெள்ளிப் பதக்கம் கிடைக்கும்.

Story first published: Sunday, September 24, 2023, 10:06 [IST]
Other articles published on Sep 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+