For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய போட்டி ஈட்டி எறிதலில் 2வது முறையாக நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.. கிஷோர் குமாருக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவில் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 82.38 மீட்டரும் இரண்டாவது முயற்சியில் 84.49 மீட்டர் தூரம் வீசி முதல் இடத்தில் இருந்தார்.

Neeraj chopra

ஆனால் நீரஜ் சோப்ராவுக்கு சக இந்திய வீரரான கிஷோர் குமாரை போட்டியாளராக அமைந்தார். அவர் முதல் முயற்சியில் 81.26 மீட்டர், இரண்டாவது முயற்சியில் 79.76 மீட்டர் வீசிய நிலையில் மூன்றாவது முயற்சியில் 86.77 மீட்டர் தூரம் வீசி நீரஜ் சோப்ராவை பின்னுக்கு தள்ளினார். இதனை அடுத்து நீரஜ் சோப்ரா நான்காவது முயற்சியில் கிஷோர் குமாரை பின்னுக்கு தள்ளுவாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

கடும் நெருக்கடியில் களம் இறங்கிய நீரஜ் சோப்ரா வழக்கம் போல் தன்னுடைய நான்காவது முயற்சியில் அபாரமாக வீசினார். அதில் 88.88 மீட்டர் பதிவானது. நடப்பு சீசனில் இது நீரஜ் சோப்ராவின் சிறந்த செயல்பாடு ஆகும். இதனை அடுத்து மீண்டும் கிஷோர் குமாருக்கு நீரஜ் சோப்ராவை முறியடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் நீரஜ் சோப்ரா ரெக்கார்ட் வரை அருகே வந்தார்.

கிஷோர் குமார் தன்னுடைய நான்காவது முயற்சியில் 87.54 நாள் மீட்டர் தூரம் வீசினார். இதன் மூலம் நீரஜ் சோப்ரா தொடர்ந்து முதலிடத்தில் பிடித்தார்.இதன் மூலம் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ராவுக்கு தங்கமும், கிஷோர் குமாருக்கு வெள்ளி பதக்கமும் ஜப்பான் வீரர் ரோட்ரிக்கிற்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.

பாகிஸ்தான் வீரர் யாசிர்முகமது நான்காவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் நீரஜ் சோப்ரா இரண்டாவது முறையாக தங்கம் வென்று இருக்கிறார். மேலும் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி என முதல் இரண்டு இடத்தையும் இந்தியா பிடித்தது இதுவே முதல் முறையாகும்.

Story first published: Wednesday, October 4, 2023, 18:23 [IST]
Other articles published on Oct 4, 2023
English summary
Asian games 2023 - Neeraj chopra won gold in javelin throw and kishore got silver ஆசிய போட்டி ஈட்டி எறிதலில் 2வது முறையாக நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.. கிஷோர் குமாருக்கு வெள்ளி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+