Asian Games 2023 : தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இத்தனை பேரா? இதோ தமிழக வீரர்கள் பட்டியல்!
சென்னை : 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியாவில் இருந்து 655 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 46 பேர் இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவர்களில் பலர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

இந்திய அளவில் அதிக வீரர்களை அனுப்பும் மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு நான்காம் இடத்தில் உள்ளது. 89 பேருடன் ஹரியானா முதல் இடத்திலும், 73 பேருடன் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், 50 பேருடன் பஞ்சாப் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் பட்டியல் -
தடகளம் - சந்தோஷ் தமிழரசன், ஆரோக்கிய ராஜீவ், ராஜேஷ் ரமேஷ், அருள் ராஜலிங்கம், ஜெஸ்வின் ஆல்ட்ரின், பிரவீன் சித்திரவேல், வித்யா ராமராஜ், நித்யா ராமராஜ், சுபா வெங்கடேசன், பவித்ரா வெங்கடேஷ்
வாலிபால் - மனோஜ் மஞ்சுநாத், மோகன் உக்கிரபாண்டியன், சந்தோஷ் அந்தோணி ராஜ், குரு பிரசாந்த் சுப்பிரமணியன், ஷாலினி சர்வாணன், சுஜி விஜயன்
படகோட்டம் - சித்ரேஷ் தத்தா, விஷ்ணு சரவணன், கே.சி.கணபதி, வருண் தக்கர், ஐஸ்வர்யா கணேஷ், நேத்ரா குமணன்
ஸ்குவாஷ் - சவுரவ் கோசல், அபய் சிங், ஹரிந்தர்பால் சிங் சந்து, ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் கார்த்திக்
செஸ் - பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி, சவிதாஸ்ரீ பி
கூடைப்பந்து - புஷ்பா செந்தில்குமார்
ரோலர் ஸ்போர்ட்ஸ் - ஆனந்தகுமார் வேலுகுமார், ஆர்த்தி கஸ்தூரி ராஜ், கார்த்திகா ஜெகதீஸ்வரன்
கால்பந்து - இந்துமதி கதிரேசன், சௌமியா நாராயணசாமி, சந்தியா ரங்கநாதன்
டேபிள் டென்னிஸ் - சரத் கமல், சத்தியா ஞானசேகரன்
டென்னிஸ் - ராம்குமார் ராமநாதன்
சாப்ட் டென்னிஸ் - ராகா மனோகர்பாபு
வென்சிங் - பவானி தேவி
துப்பாக்கி சூடு - பிருத்விராஜ் தொண்டைமான்
படகோட்டுதல் - ரோஸ் மெரில் அல்போன் ராஜ்


Click it and Unblock the Notifications