Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் தம்பியை ஜெயிச்சிட்டு ஏசியன் கேம்ஸ் ஆடப்போ.. பஜ்ரங் புனியாவுக்கு மல்யுத்த வீரரின் அண்ணன் சவால்!

ஹிசார் : சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா நேரடியாக நுழைய அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மல்யுத்த வீரர்களை தேர்வு செய்யும் சோதனை ஆட்டங்கள் நடைபெற்றன அதில் பஜ்ரங் புனியா கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அதில் தகுதி பெற்ற மல்யுத்த வீரர் விஷால் காளிராமனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அவரது கிராமத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Asian Games 2023 : Vishal Kaliramans brother challenges Bajrang Punia

கடந்த ஜூலை மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான சோதனை போட்டிகளில் பங்கேற்க புனியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அவர் கிர்கிஸ்தானுக்கு பயிற்சி செய்ய அனுப்பப்பட்டார். மறுபுறம், விஷால், டெல்லியில் நடைபெற்ற 65 கிலோ ஃப்ரீஸ்டைல் சோதனைகளில் வெற்றி பெற்றார், ஆனால் ஹாங்சோவுக்கு செல்லும் குழுவில் இடம் பெறாமல் காத்திருப்பில் வைக்கப்பட்டார். ஆனால் தற்போது சோதனையில் பங்கேற்காமல் பஜ்ரங் புனியா நேரடியாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சென்று விட்டார்.

புனியாவுக்கு சோதனைகளில் விலக்கு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஷால் காளிராமன் ஆதரவாளர்கள் அங்குள்ள கிராந்திமான் பூங்காவில் திரண்டனர், பின்னர் முழக்கங்களை எழுப்பியவாறு வீதிகளில் ஊர்வலம் சென்றனர்.
பஜ்ரங் புனியாவின் உருவ பொம்மையையும் எரித்தனர்.

முதல்வரின் அலுவலகம் வரை சென்ற அவர்களின் ஊர்வலத்தின் முடிவில், துணை கமிஷனர் மூலம் ஹரியானா முதல்வரிடம் கொடுத்த மனுவில், விஷாலுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம், நீதிமன்றம் செல்வோம், முடிந்ததைச் செய்வோம்" என்று விஷால் காளிராமனின் அண்ணன் கிரிஷன் கூறினார்.

பஜ்ரங் புனியா, விஷாலை எதிர்த்துப் போரிட வேண்டும் என்றும், அதில் யார் வெற்றி பெற்றாலும் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லட்டும் என்றும் கிரிஷன் சவால் விடுத்தார். "விஷால் வெற்றி பெற்றால், அவரை ஹாங்சோவுக்கு அனுப்ப வேண்டும்" என்றும் கிரிஷன் கூறினார்.

விஷாலின் தாயார் ராஜ்பாலா, தனது மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். "அவர் எட்டு வயதிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இப்போது வாய்ப்பு வந்தபோது அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது. அவரும் இந்த நாட்டின் மகன்தான், என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும்,'' என்றார்.

Story first published: Wednesday, September 20, 2023, 22:57 [IST]
Other articles published on Sep 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+