Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"விஜய் எனக்கு போன் பண்ணா..".. 2 செ.மீ-ல் ஆசிய விளையாட்டு தங்கம் தவறவிட்ட அன்சி சோஜன் பேச்சு

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெறும் 2 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை அன்சி சோஜன், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்த வேண்டும் என்ற தனது நெகிழ்ச்சியான ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

மகளிர் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் கேரளாவை சேர்ந்த 25 வயதான நட்சத்திர வீராங்கனை அன்சி சோஜன் பங்கேற்றார். தனது 2வது முயற்சியில் 6.53 மீட்டர் தூரம் தாண்டி இறுதிவரை தங்கப் பதக்கத்திற்கான முதல் இடத்திலேயே நீடித்தார்.

Asian Games 2026 Ancy Sojan Expresses Wish to Receive a Call from Tamil Nadu Chief Minister Joseph Vijay

ஆனால் கடைசி சுற்றில் சீன வீராங்கனை ஹுவாங் யிங்யிங் 6.55 மீட்டர் தூரம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். கடைசி முயற்சியில் அன்சி சோஜன் 6.49 மீட்டர் தூரமே தாண்ட முடிந்ததால், வெறும் 2 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தங்கத்தை இழந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷைலி சிங் 6.42 மீட்டர் தூரம் தாண்டி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு பதக்கத்தை தவறவிட்டார்.

ஹாங்சோ ஆசிய போட்டியைத் தொடர்ந்து தற்போது ஜப்பானிலும் வெள்ளி வென்றதன் மூலம், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தொடர்ச்சியாக பல பதக்கங்களை வென்ற 2வது இந்திய பெண் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அன்சி சோஜன் படைத்துள்ளார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு பேட்டி அளித்த அன்சி சோஜன் கூறியதாவது: "விஜய் சாரிடமிருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தால் நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைவேன். அவரது ஊக்கமளிக்கும் பேச்சுகளும் கருத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்" என்று தெரிவித்தார்.

சேப்பாக்கத்தில் அஸ்வின் உள்பட 3 தமிழக ஜாம்பவான்கள் பெயரில் புதிய ஸ்டாண்டு.. டிஎன்சிஏ முடிவு

சேப்பாக்கத்தில் அஸ்வின் உள்பட 3 தமிழக ஜாம்பவான்கள் பெயரில் புதிய ஸ்டாண்டு.. டிஎன்சிஏ முடிவு

முன்னதாக புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற போதும், அன்சி சோஜன் தமிழக முதல்வர் விஜய்யின் புகழ்பெற்ற சிக்னேச்சர் போஸை மைதானத்தில் செய்து காட்டி தனது அன்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது ஆசிய பதக்கம் வென்ற கையோடு அவர் விஜய்யிடம் வாழ்த்து கேட்டுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Story first published: Tuesday, September 29, 2026, 17:15 [IST]
Other articles published on Sep 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+