Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டுப் போட்டி குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு பதக்கம்.. நரேந்தர் வெண்கலம் வென்று அசத்தல்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 90+ கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை அரையிறுதியில் இந்திய வீரர் நரேந்தர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியனான கஜகஸ்தான் வீரரிடம் போராடி தோல்வியடைந்த அவர், இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

ஆடவர் 90+ கிலோ எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் நரேந்தர், நடப்பு உலக சாம்பியனான கஜகஸ்தானின் ஐபெக் ஓரல்பாயை எதிர்கொண்டார். போட்டியின் முதல் சுற்றிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய கஜகஸ்தான் வீரர், நடுவர்களின் முடிவின்படி முதல் சுற்றைக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் சுதாரித்து ஆடிய ஐபெக் ஓரல்பாய், நரேந்தருக்கு எந்த வாய்ப்பும் தராமல் புள்ளிகளை அள்ளினார்.

Asian Games 2026 Boxer Narendra Settles for Bronze After Hard-Fought Semifinal Against World Champion

இறுதியில் ஐபெக் ஓரல்பாய் 3-0 என்ற கணக்கில் நரேந்தரை வீழ்த்தி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். தோல்வியடைந்தாலும் அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் நரேந்தர் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். முன்னதாக நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர்களான பர்வீன் மற்றும் அங்குஷ் ஆகியோர் தங்களது பிரிவுகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஒரு மேட்ச் கூட நடக்கலை.. இந்தியா, பாகிஸ்தான் உட்பட செமி பைனல் போன 4 அணிகள்.. ரத்தான காலிறுதி

ஒரு மேட்ச் கூட நடக்கலை.. இந்தியா, பாகிஸ்தான் உட்பட செமி பைனல் போன 4 அணிகள்.. ரத்தான காலிறுதி

தற்போது நரேந்தரும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதன் மூலம், இந்திய குத்துச்சண்டை அணி நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

Story first published: Tuesday, September 29, 2026, 12:14 [IST]
Other articles published on Sep 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+