ஆசிய விளையாட்டுப் போட்டி 2026.. இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் என்னென்ன? முழு அட்டவணை
ஐச்சி-நகோயா: ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா பல விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவின் பயணம் செப்டம்பர் 17 அன்று டெக்பால் போட்டியுடன் தொடங்குகிறது. செப்டம்பர் 18 அன்று ஜப்பானுக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் காலிறுதி ஆட்டம் மற்றும் சாப்ட் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.
பேட்மிண்டன், ஹாக்கி, கபடி, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட முக்கிய குழு விளையாட்டுகள் அட்டவணையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. செப்டம்பர் 24 முதல் 29 வரை தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, நீச்சல், துடுப்பு படகோட்டம் மற்றும் மல்யுத்தம் ஆகியவற்றிலும் இந்தியாவுக்கு அதிக பதக்க வாய்ப்புகள் உள்ளன. பளுதூக்குதலில் மீராபாய் சானு, ஞானேஸ்வரி யாதவ், செரம் நிருபமா தேவி, ஹர்ஜிந்தர் கவுர் ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளன.

இந்திய வீரர்கள் பங்கேற்கும் முழுமையான போட்டி அட்டவணை விவரம்:
செப்டம்பர் 17
- டெக்பால்: ஆண்கள் இரட்டையர், பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர்.
செப்டம்பர் 18
- கிரிக்கெட்: இந்தியா vs ஜப்பான், மகளிர் காலிறுதி.
- சாப்ட் டென்னிஸ்: ஆண்கள் அணி தகுதிச் சுற்று மற்றும் காலிறுதி.
- டெக்பால்: பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் தகுதிச் சுற்றுகள்.
செப்டம்பர் 19
- டெக்பால்: பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர், ஆண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டங்கள்.
செப்டம்பர் 20
- பேட்மிண்டன்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ஆரம்ப சுற்று.
- கிரிக்கெட்: மகளிர் அரையிறுதி ஆட்டம்.
- ஹாக்கி: இந்தியா vs இந்தோனேசியா (ஆண்கள் பிரிவு ஏ); இந்தியா vs உஸ்பெகிஸ்தான் (பெண்கள் பிரிவு பி).
- எம்எம்ஏ: ஆண்கள் 77 கிலோ; பெண்கள் 60 கிலோ.
- துப்பாக்கி சுடுதல்: பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் அணிகள் தகுதிச் சுற்று, இறுதிப்போட்டி.
- சாப்ட் டென்னிஸ்: ஆண்கள் அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி.
- நீச்சல்: ஆண்கள் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் மற்றும் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் தகுதிச் சுற்று, இறுதிப்போட்டி.
- டேபிள் டென்னிஸ்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி குரூப் சுற்றுகள்.
- டெக்பால்: ஆண்கள் இரட்டையர், பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டிகள்.
- வுஷூ: ஆண்கள் சாங்குவான் இறுதிப்போட்டி, சண்டா பிரிவுகள்.
செப்டம்பர் 21
- பேட்மிண்டன்: ஆண்கள் அணி 16-வது சுற்று.
- குத்துச்சண்டை: ஆண்கள் 70 கிலோ பிரிவு.
- ஹாக்கி: இந்தியா vs இந்தோனேசியா (பெண்கள் பிரிவு பி).
- கபடி: ஜப்பான் vs இந்தியா (ஆண்கள் பிரிவு ஏ); வங்கதேசம் vs இந்தியா (பெண்கள் பிரிவு ஏ).
- எம்எம்ஏ: ஆண்கள் 77 கிலோ; பெண்கள் 60 கிலோ.
- ரோயிங் (துடுப்பு படகோட்டம்): ஆண்கள் குவாட்ருபிள் ஸ்கல்ஸ், லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் தகுதிச் சுற்று.
- துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு, ஸ்கீட் பிரிவுகள்.
- சாப்ட் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் காலிறுதி மற்றும் பதக்கச் சுற்றுகள்.
- நீச்சல்: ஆண்கள் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக், 4x200 மீட்டர் ரிலே.
- டேபிள் டென்னிஸ்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி நாக்-அவுட் சுற்றுகள், பெண்கள் இரட்டையர் முதல் சுற்று.
- வுஷூ: பெண்கள் சாங்குவான் இறுதிப்போட்டி, சண்டா சுற்றுகள்.
செப்டம்பர் 22
- ஜிம்னாஸ்டிக்ஸ்: பெண்கள் தகுதிச் சுற்று.
- பேட்மிண்டன்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி காலிறுதி ஆட்டங்கள்.
- குத்துச்சண்டை: பெண்கள் 51 கிலோ, 54 கிலோ; ஆண்கள் 55 கிலோ தகுதிச் சுற்றுகள்.
- குதிரையேற்றம்: தனிநபர் மற்றும் அணிகள் கிராஸ்-கன்ட்ரி.
- வாள்சண்டை: ஆண்கள் பாயில் தனிநபர்; பெண்கள் எப்பி தனிநபர்.
- ஹாக்கி: இந்தியா vs இலங்கை (ஆண்கள் பிரிவு ஏ).
- கபடி: தென் கொரியா vs இந்தியா (ஆண்கள் பிரிவு ஏ).
- கராத்தே: பெண்கள் 55 கிலோ, ஆண்கள் 84 கிலோ பதக்கப் போட்டிகள்.
- எம்எம்ஏ: ஆண்கள் 77 கிலோ, பெண்கள் 60 கிலோ பதக்கப் போட்டிகள்.
- ரோயிங்: இந்திய வீரர்கள் பங்கேற்கும் தகுதிச் சுற்றுகள்.
- துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதி மற்றும் பதக்கச் சுற்றுகள், ஸ்கீட் பிரிவுகள்.
- நீச்சல்: ஆண்கள் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 4x100 மீட்டர் மெட்லே ரிலே.
- டேபிள் டென்னிஸ்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி 16-வது சுற்று மற்றும் காலிறுதி, கலப்பு இரட்டையர் ஆரம்ப சுற்று.
- வுஷூ: பெண்கள் நாங்குவான் இறுதிப்போட்டி, சண்டா காலிறுதி.
செப்டம்பர் 23
- ஜிம்னாஸ்டிக்ஸ்: பெண்கள் இறுதிப்போட்டி.
- பேட்மிண்டன்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அரையிறுதி ஆட்டங்கள்.
- குத்துச்சண்டை: ஆண்கள் 60 கிலோ, 80 கிலோ ஆரம்ப சுற்றுகள்.
- கேனோயிங் / கயாகிங்: ஆண்கள் மற்றும் பெண்கள் 500 மீட்டர், 200 மீட்டர் பிரிவுகள்.
- கிரிக்கெட்: மகளிர் அரையிறுதி ஆட்டம்.
- குதிரையேற்றம்: ஜம்பிங் மற்றும் பதக்கப் போட்டிகள்.
- வாள்சண்டை: பெண்கள் பாயில் தனிநபர்; ஆண்கள் சேபர் தனிநபர்.
- ஹாக்கி: தாய்லாந்து vs இந்தியா (பெண்கள் பிரிவு பி).
- கபடி: வங்கதேசம் vs இந்தியா (ஆண்கள் பிரிவு ஏ); ஈரான் vs இந்தியா (பெண்கள் பிரிவு ஏ).
- ரோயிங்: பல்வேறு பிரிவுகளின் இறுதிப்போட்டிகள்.
- துப்பாக்கி சுடுதல்: பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு, ஸ்கீட் இறுதிப்போட்டிகள்.
- சாப்ட் டென்னிஸ்: ஒற்றையர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள்.
- ஸ்குவாஷ்: ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆரம்ப சுற்றுகள்.
- நீச்சல்: ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை, 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல்.
- டேபிள் டென்னிஸ்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அரையிறுதி ஆட்டங்கள், ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆரம்ப சுற்றுகள்.
- பளுதூக்குதல்: ரிஷிகாந்த சிங் (ஆண்கள் 60 கிலோ), மீராபாய் சானு (பெண்கள் 49 கிலோ), ஞானேஸ்வரி யாதவ் (பெண்கள் 53 கிலோ), செரம் நிருபமா தேவி (பெண்கள் 61 கிலோ), ஹர்ஜிந்தர் கவுர் (பெண்கள் 69 கிலோ).
- வுஷூ: சண்டா அரையிறுதி ஆட்டங்கள்.
செப்டம்பர் 24
- ஜிம்னாஸ்டிக்ஸ்: பெண்கள் வால்ட் இறுதிப்போட்டி.
- தடகளம்: பெண்கள் ஹெப்டாத்லான், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஆண்கள் 100 மீட்டர் முதல் சுற்று, கலப்பு 4x400 மீட்டர் ரிலே, பெண்கள் 10,000 மீட்டர் இறுதிப்போட்டி.
- பேட்மிண்டன்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இறுதிப்போட்டிகள்.
- குத்துச்சண்டை: ஆண்கள் 70 கிலோ, பெண்கள் 51 கிலோ, 65 கிலோ ஆரம்ப சுற்றுகள்.
- வாள்சண்டை: பெண்கள் சேபர் தனிநபர்.
- ஹாக்கி: தென் கொரியா vs இந்தியா (ஆண்கள் பிரிவு ஏ).
- கபடி: சீன தைபே vs இந்தியா (ஆண்கள் பிரிவு ஏ); ஜப்பான் vs இந்தியா (பெண்கள் பிரிவு ஏ).
- ரோயிங்: குவாட்ருபிள் ஸ்கல்ஸ், லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் இறுதிப்போட்டிகள்.
- துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ், ஸ்கீட் கலப்பு அணி பதக்கச் சுற்றுகள்.
- ஸ்குவாஷ்: ஆரம்ப சுற்றுகள்.
- நீச்சல்: ஆண்கள் 50 மீட்டர் பட்டர்பிளை, 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 4x100 மீட்டர் ரிலே.
- டேபிள் டென்னிஸ்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இறுதிப்போட்டிகள்.
- வுஷூ: சண்டா இறுதிப்போட்டிகள்.
செப்டம்பர் 25
- தடகளம்: பெண்கள் ஹெப்டாத்லான், ஷாட்புட், போல் வால்ட், 400 மீட்டர், ஆண்கள் 100 மீட்டர், 400 மீட்டர், 10,000 மீட்டர் இறுதிப்போட்டி, ஹேமர் த்ரோ இறுதிப்போட்டி.
- பேட்மிண்டன்: தனிநபர் மற்றும் இரட்டையர் ஆரம்ப சுற்றுகள்.
- குத்துச்சண்டை: ஆண்கள் 60 கிலோ, 90 கிலோவுக்கு மேல்; பெண்கள் 54 கிலோ பிரிவுகள்.
- வாள்சண்டை: ஆண்கள் பாயில் அணி, பெண்கள் எப்பி அணி.
- ஹாக்கி: ஜப்பான் vs இந்தியா (பெண்கள் பிரிவு பி).
- கபடி: ஆண்கள் மற்றும் பெண்கள் அரையிறுதி ஆட்டங்கள்.
- செபாக்தக்ரா: ஆண்கள் அணி ஆரம்ப மற்றும் பதக்கச் சுற்றுகள்.
- துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி, ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிப்போட்டி.
- ஸ்குவாஷ்: காலிறுதி ஆட்டங்கள்.
- சர்பிங்: ஆண்கள் மற்றும் பெண்கள் ஷார்ட்போர்டு சுற்றுகள்.
- நீச்சல்: 50 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக், 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக், 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 200 மீட்டர் பட்டர்பிளை.
- டேபிள் டென்னிஸ்: ஒற்றையர் மற்றும் இரட்டையர் சுற்றுகள், கலப்பு இரட்டையர் அரையிறுதி.
செப்டம்பர் 26
- வில்வித்தை: ரிகர்வ் மற்றும் காம்பவுண்ட் பிரிவுகள்.
- தடகளம்: ஆண்கள் மாரத்தான், டெகத்லான், ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று, 200 மீட்டர், பெண்கள் நீளம் தாண்டுதல், தடை ஓட்டம், 1500 மீட்டர், ஷாட்புட், மும்முறை தாண்டுதல், 400 மீட்டர் இறுதிப்போட்டிகள்.
- பேட்மிண்டன்: தனிநபர் மற்றும் இரட்டையர் சுற்றுகள்.
- குத்துச்சண்டை: ஆண்கள் 55 கிலோ, 90 கிலோ; பெண்கள் 60 கிலோ பிரிவுகள்.
- கேனோயிங் / கயாகிங்: பல்வேறு 500 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரிவுகள்.
- குதிரையேற்றம்: டிரஸ்ஸேஜ் தனிநபர் தகுதிச் சுற்று.
- வாள்சண்டை: பெண்கள் பாயில் அணி, ஆண்கள் சேபர் அணி.
- ஹாக்கி: ஜப்பான் vs இந்தியா (ஆண்கள் பிரிவு ஏ).
- துப்பாக்கி சுடுதல்: பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிப்போட்டி.
- ஸ்குவாஷ்: அரையிறுதி ஆட்டங்கள்.
- சர்பிங்: ஷார்ட்போர்டு அடுத்தடுத்த சுற்றுகள்.
- டேபிள் டென்னிஸ்: காலிறுதி ஆட்டங்கள், கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டி.
செப்டம்பர் 27
- வில்வித்தை: தொடக்க சுற்றுகள்.
- தடகளம்: பெண்கள் மாரத்தான் நடைப்பந்தயம், ஆண்கள் டெகத்லான், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 200 மீட்டர், 400 மீட்டர் தடை ஓட்டம், பெண்கள் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி, 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப்போட்டி.
- பேட்மிண்டன்: காலிறுதி ஆட்டங்கள்.
- குத்துச்சண்டை: பல்வேறு எடைக் கட்டமைப்புப் பிரிவுகள்.
- குதிரையேற்றம்: டிரஸ்ஸேஜ் தனிநபர் இறுதிப்போட்டி.
- வாள்சண்டை: பெண்கள் சேபர் அணி.
- ஹாக்கி: இந்தியா vs சிங்கப்பூர் (பெண்கள் பிரிவு பி).
- கபடி: ஆண்கள் மற்றும் பெண்கள் இறுதிப்போட்டிகள்.
- குராஷ்: ஆண்கள் மற்றும் பெண்கள் எடைக் கட்டமைப்புப் போட்டிகள்.
- செபாக்தக்ரா: பெண்கள் இரட்டையர் பதக்கச் சுற்றுகள்.
- துப்பாக்கி சுடுதல்: பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல், ட்ராப் தகுதிச் சுற்று.
- ஸ்குவாஷ்: ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டிகள், அணிகள் பிரிவு தொடக்கம்.
- சர்பிங்: காலிறுதி ஆட்டங்கள்.
- டேபிள் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் மற்றும் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிகள்.
- டென்னிஸ்: ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆரம்ப சுற்றுகள்.
- கைப்பந்து (வாலிபால்): ஆண்கள் பிரிவு சி ஆரம்ப சுற்று.
செப்டம்பர் 28
- வில்வித்தை: ரிகர்வ் மற்றும் காம்பவுண்ட் சுற்றுகள்.
- தடகளம்: வட்டு எறிதல், 400 மீட்டர் தடை ஓட்டம், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ், நீளம் தாண்டுதல், 1500 மீட்டர், ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி, பெண்கள் 5000 மீட்டர், 4x100 மீட்டர் ரிலே இறுதிப்போட்டிகள்.
- பேட்மிண்டன்: அரையிறுதி ஆட்டங்கள்.
- குத்துச்சண்டை: ஆரம்ப சுற்றுகள்.
- கிரிக்கெட்: இந்தியா vs குரூப் ஏ இரண்டாம் இடம் பெற்ற அணி, ஆண்கள் காலிறுதி.
- ஹாக்கி: இந்தியா vs வங்கதேசம் (ஆண்கள் பிரிவு ஏ).
- துப்பாக்கி சுடுதல்: பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப்போட்டி, ட்ராப் தகுதிச் சுற்று.
- ஸ்குவாஷ்: அணிகள் பிரிவு காலிறுதி.
- சர்பிங்: அரையிறுதி மற்றும் பதக்கப் போட்டிகள்.
- டென்னிஸ்: ஆரம்ப சுற்றுகள்.
- வாலிபால்: ஆண்கள் பிரிவு சி போட்டி.
செப்டம்பர் 29
- வில்வித்தை: ரிகர்வ் மற்றும் காம்பவுண்ட் சுற்றுகள்.
- தடகளம்: போல் வால்ட், உயரம் தாண்டுதல், ஹேமர் த்ரோ, 800 மீட்டர், 5000 மீட்டர், 4x100 மீட்டர் ரிலே, 4x400 மீட்டர் ரிலே இறுதிப்போட்டிகள்.
- பேட்மிண்டன்: அனைத்துப் பிரிவுகளின் இறுதிப்போட்டிகள்.
- குத்துச்சண்டை: பல்வேறு எடைப் பிரிவுகளின் அரையிறுதி ஆட்டங்கள்.
- துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் மற்றும் பெண்கள் ட்ராப் இறுதிப்போட்டிகள்.
- சாப்ட் டென்னிஸ்: ஒற்றையர் ஆரம்ப சுற்றுகள்.
- டென்னிஸ்: ஆரம்ப சுற்றுகள்.
- சைக்கிளிங் (ட்ராக்): ஆண்கள் மற்றும் பெண்கள் ஸ்பிரிண்ட், கெய்ரின் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள்.
- வாலிபால்: ஆண்கள் பிரிவு சி போட்டி.
செப்டம்பர் 30
- வில்வித்தை: காம்பவுண்ட் பதக்கப் போட்டிகள்.
- குத்துச்சண்டை: அரையிறுதி ஆட்டங்கள்.
- கேனோயிங் / கயாகிங்: ஸ்லாலோம் மற்றும் கிராஸ் பிரிவுகள்.
- கோல்ப்: ஆண்கள் மற்றும் பெண்கள் தனிநபர் மற்றும் அணிகள் முதல் சுற்று.
- ஹாக்கி: மகளிர் அரையிறுதி ஆட்டம்.
- ஜூடோ: பெண்கள் 48 கிலோ பதக்கப் போட்டிகள்.
- ஸ்போர்ட் கிளைம்பிங்: ஆண்கள் மற்றும் பெண்கள் ஸ்பீடு 4 சுற்றுகள்.
- டென்னிஸ்: ஆரம்ப சுற்றுகள்.
- சைக்கிளிங்: பல்வேறு பதக்கப் போட்டிகள்.
- மல்யுத்தம்: ஆண்கள் கிரேக்கோ ரோமன் 67 கிலோ, 87 கிலோ; பெண்கள் 68 கிலோ பதக்கப் போட்டிகள்.
அக்டோபர் 1
- கிரிக்கெட்: ஆண்கள் அரையிறுதி ஆட்டம்.
- கோல்ப்: 2-வது சுற்று.
- ஹாக்கி: ஆண்கள் அரையிறுதி ஆட்டம்.
- ஜூடோ: பெண்கள் 57 கிலோ, 70 கிலோ பதக்கப் போட்டிகள்.
- ரக்பி செவன்ஸ்: பெண்கள் ஆரம்ப சுற்று.
- துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் இறுதிப்போட்டி.
- ஸ்போர்ட் கிளைம்பிங்: ஆண்கள் ஸ்பீடு 4 இறுதிப்போட்டி.
- டென்னிஸ்: காலிறுதி ஆட்டங்கள்.
- டேக்வாண்டோ: பெண்கள் பூம்சே அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி.
- வாலிபால்: ஆண்கள் காலிறுதி ஆட்டம்.
- மல்யுத்தம்: ஆண்கள் கிரேக்கோ ரோமன் 60 கிலோ, 77 கிலோ, 97 கிலோ; பெண்கள் 62 கிலோ பதக்கப் போட்டிகள்.
அக்டோபர் 2
- வில்வித்தை: ரிகர்வ் பதக்கப் போட்டிகள்.
- குத்துச்சண்டை: ஆண்கள் மற்றும் பெண்கள் அனைத்துப் பிரிவுகளின் இறுதிப்போட்டிகள்.
- கேனோயிங் / கயாகிங்: ஸ்லாலோம் மற்றும் கிராஸ் பிரிவுகள்.
- கோல்ப்: 3-வது சுற்று.
- ஹாக்கி: மகளிர் பதக்கப் போட்டி.
- ரக்பி செவன்ஸ்: பெண்கள் ஆரம்ப சுற்று.
- ஸ்குவாஷ்: ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இறுதிப்போட்டிகள்.
- டென்னிஸ்: அரையிறுதி ஆட்டங்கள்.
- வாலிபால்: ஆண்கள் அரையிறுதி ஆட்டம்.
- மல்யுத்தம்: ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ, 125 கிலோ; பெண்கள் 50 கிலோ, 76 கிலோ பதக்கப் போட்டிகள்.
பாகிஸ்தான் பேட்டிங் கிங்-குக்கே இந்த நிலைமையா? பாபர் அசாமுக்கு நேர்ந்த கதி.. என்ன நடந்தது?
அக்டோபர் 3
- வில்வித்தை: ரிகர்வ் பதக்கப் போட்டிகள்.
- கிரிக்கெட்: ஆண்கள் வெண்கலப் பதக்கப் போட்டி மற்றும் இறுதிப்போட்டி.
- கோல்ப்: இறுதிச் சுற்று.
- ஹாக்கி: ஆண்கள் பதக்கப் போட்டி.
- ரக்பி செவன்ஸ்: பெண்கள் அரையிறுதி மற்றும் பதக்கப் போட்டிகள்.
- டேக்வாண்டோ: பெண்கள் கியோருகி பதக்கப் போட்டிகள்.
- டென்னிஸ்: ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறுதிப்போட்டிகள்.
- வாலிபால்: ஆண்கள் பதக்கப் போட்டி.
- மல்யுத்தம்: ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ, 74 கிலோ, 97 கிலோ; பெண்கள் 53 கிலோ, 57 கிலோ இறுதிப்போட்டிகள்.


Click it and Unblock the Notifications
