Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு போட்டி 2026.. செப்டம்பர் 25 இந்தியா ஆடும் போட்டிகள், பதக்க வாய்ப்புகள் முழு லிஸ்ட்

நகோயா: ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 7-வது நாளான இன்று (செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமை) இந்திய வீரர், வீராங்கனைகள் 14 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் களம் காண்கின்றனர். தடகளம், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், குதிரையேற்றம் மற்றும் கனோ ஸ்பிரிண்ட் ஆகியவற்றில் இன்று இந்தியாவுக்கு நேரடிப் பதக்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

கபடி களத்தில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடி பதக்கங்களை உறுதி செய்ய உள்ளன. தடகளத்தில் ஆடவர் 10,000 மீட்டர், குண்டு எறிதல், போல் வால்ட் உள்ளிட்ட பிரிவுகளில் இறுதிப்போட்டிகள் நடைபெறுகின்றன. பாட்மிண்டனில் இந்தியாவின் நட்சத்திர இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி கூட்டணி தனது ஆதிக்கத்தைத் தொடங்குகிறது. மகளிர் ஹாக்கியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Asian Games 2026 Day 7 Schedule Full List of Events amp amp Indian Athletes in Action on September 25


செப்டம்பர் 25 - இந்திய போட்டிகளின் முழு அட்டவணை (இந்திய நேரப்படி):

துப்பாக்கி சுடுதல்:

  • காலை 6:15 - 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு குழு தகுதிச்சுற்று: கமல்ஜீத், சுருச்சி இந்தர் சிங்
  • காலை 7:15 - 50 மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் தனிநபர் தகுதிச்சுற்று & குழு இறுதிப்போட்டி: ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ருத்ராங்க்ஷ் பாட்டீல், நீரஜ் குமார் (பதக்க வாய்ப்பு)
  • காலை 8:30 - 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு குழு இறுதிப்போட்டி (தகுதி பெறுவதன் அடிப்படையில்)
  • காலை 10:30 - 50 மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் தனிநபர் இறுதிப்போட்டி (தகுதி பெறுவதன் அடிப்படையில்)

தடகளம்:

  • காலை 6:30 - மகளிர் ஹெப்டத்லான் நீளம் தாண்டுதல்: பூஜா, அனாமிகா
  • காலை 7:55 - மகளிர் ஹெப்டத்லான் ஈட்டி எறிதல்: பூஜா, அனாமிகா
  • பிற்பகல் 3:35 - மகளிர் குண்டு எறிதல் இறுதிப்போட்டி: மன்பிரீத் கவுர், கிருஷ்ணா ஜெயசங்கர் (பதக்க வாய்ப்பு)
  • மாலை 4:03 - ஆடவர் 100 மீ அரையிறுதி: குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜுர்
  • மாலை 4:33 - மகளிர் போல் வால்ட் இறுதிப்போட்டி: சிந்துஸ்ரீ கணேஷா, பரணிகா இளங்கோவன் (பதக்க வாய்ப்பு)
  • மாலை 4:41 - மகளிர் ஹெப்டத்லான் 800 மீ ஓட்டம்: பூஜா, அனாமிகா
  • மாலை 5:02 - ஆடவர் 10,000 மீ இறுதிப்போட்டி: குல்வீர் சிங் (பதக்க வாய்ப்பு)
  • மாலை 5:10 - ஆடவர் சுத்தி எறிதல் இறுதிப்போட்டி: தம்னீத் சிங், பிரவீண் குமார் (பதக்க வாய்ப்பு)
  • மாலை 5:53 - மகளிர் 400 மீ முதல் சுற்று ஹீட்ஸ்: கிரண், பிராச்சி
  • மாலை 6:21 - ஆடவர் 400 மீ முதல் சுற்று ஹீட்ஸ்: விஷால் டிகே
  • மாலை 6:50 - ஆடவர் 100 மீ இறுதிப்போட்டி: குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜுர் (தகுதி பெறுவதன் அடிப்படையில்)

கபடி:

  • காலை 9:30 - மகளிர் அரையிறுதி: இந்தியா vs நேபாளம்
  • காலை 10:45 - ஆடவர் அரையிறுதி: இந்தியா vs தாய்லாந்து

பளுதூக்குதல்:

  • பிற்பகல் 1:30 - மகளிர் 61 கிலோ இறுதிப்போட்டி: செராம் நிருபமா தேவி (பதக்க வாய்ப்பு)

ஹாக்கி:

  • காலை 7:30 - மகளிர் பூல்-பி லீக் போட்டி: இந்தியா vs ஜப்பான்

பாட்மிண்டன்:

  • மாலை 4:00 மணிக்கு மேல் - ஆடவர் இரட்டையர் முதல் சுற்று: சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி / சிராக் ஷெட்டி vs தாய்லாந்து
  • மாலை 6:10 - கலப்பு இரட்டையர் முதல் சுற்று: துருவ் கபிலா / தனிஷா கிராஸ்டோ vs மாலத்தீவு
  • நேரம் முடிவாகவில்லை - மகளிர் இரட்டையர் முதல் சுற்று: திரிஷா ஜாலி / காயத்ரி கோபிசந்த் vs ஹாங்காங்
  • நேரம் முடிவாகவில்லை - மகளிர் இரட்டையர் முதல் சுற்று: கவிப்பிரியா செல்வம் / சிம்ரன் சிங்கி vs இந்தோனேசியா
  • நேரம் முடிவாகவில்லை - ஆடவர் இரட்டையர் முதல் சுற்று: ஹரிஹரன் அம்ஸகருணன் / அர்ஜுன் vs இந்தோனேசியா
  • நேரம் முடிவாகவில்லை - மகளிர் ஒற்றையர் முதல் சுற்று: உன்னதி ஹூடா vs யூ மி சாங்

ஸ்குவாஷ்:

  • காலை 7:00 - கலப்பு இரட்டையர் காலிறுதி: வேலவன் செந்தில்குமார் / ஜோஷ்னா சின்னப்பா vs பிலிப்பைன்ஸ்
  • காலை 9:15 - ஆடவர் ஒற்றையர் காலிறுதி: அபய் சிங் vs ஜப்பான்
  • காலை 10:00 - மகளிர் ஒற்றையர் காலிறுதி: அனாஹத் சிங் vs தன்வி கன்னா
  • காலை 10:45 - ஆடவர் ஒற்றையர் காலிறுதி: வீர் சோத்ரானி vs தென் கொரியா

குத்துச்சண்டை:

  • காலை 10:15 - ஆடவர் 60 கிலோ (16-வது சுற்று): சச்சின் vs முகமது அபு ஜாஜே (ஜோர்டான்)
  • பிற்பகல் 2:15 - மகளிர் 54 கிலோ (16-வது சுற்று): பிரீத்தி vs பாங் சோல் மி (வட கொரியா)

குதிரையேற்றம்:

  • காலை 6:00 - டிரேஸேஜ் குழு இறுதிப்போட்டி: இந்திய அணி (கௌரவ் புந்திர், ஹிருதய் சேடா, ஸ்ருதி வோரா, ஜெய் சுத்) - பதக்க வாய்ப்பு
  • காலை 6:00 - டிரேஸேஜ் தனிநபர் முதல் தகுதிச்சுற்று: கௌரவ் புந்திர், ஹிருதய் சேடா, ஸ்ருதி வோரா, ஜெய் சுத்

டேபிள் டென்னிஸ்:

  • காலை 6:30 - கலப்பு இரட்டையர் காலிறுதி: மனுஷ் ஷா / தியா சிதாலே vs ஹாங்காங்
  • காலை 6:30 - கலப்பு இரட்டையர் காலிறுதி: ஹர்மீத் தேசாய் / யஷஸ்வினி கோர்படே vs சீனா
  • காலை 7:30 - ஆடவர் இரட்டையர் 2-வது சுற்று: ஜி.சத்யன் / ஹர்மீத் தேசாய் vs இந்தோனேசியா
  • காலை 8:15 - ஆடவர் இரட்டையர் 2-வது சுற்று: மானவ் தக்கர் / மனுஷ் ஷா vs ஜப்பான்
  • காலை 9:00 - மகளிர் ஒற்றையர் 2-வது சுற்று: யஷஸ்வினி கோர்படே vs சிரியா
  • காலை 9:45 - மகளிர் ஒற்றையர் 2-வது சுற்று: ஸ்ரீஜா அகுலா vs வட கொரியா
  • காலை 10:30 - ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று: மானவ் தக்கர் vs வட கொரியா
  • காலை 11:15 - ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று: மனுஷ் ஷா vs ஈரான்
  • மதியம் 12:00 - மகளிர் இரட்டையர் 3-வது சுற்று: ஸ்ரீஜா அகுலா / சின்ட்ரெல்லா தாஸ் vs சீனா
  • மதியம் 12:45 - மகளிர் இரட்டையர் 3-வது சுற்று: யஷஸ்வினி கோர்படே / தியா சிதாலே vs சீனா

வாள்வீச்சு:

  • காலை 6:00 - ஆடவர் ஃபாயில் குழு (16-வது சுற்று): இந்தியா vs ஹாங்காங்
  • காலை 7:00 - மகளிர் எப்பி குழு (16-வது சுற்று): இந்தியா vs உஸ்பெகிஸ்தான்
  • காலை 8:20 முதல் - ஆடவர் ஃபாயில் & மகளிர் எப்பி காலிறுதி (தகுதி அடிப்படையில்)
  • காலை 10:50 முதல் - ஆடவர் ஃபாயில் அரையிறுதி (தகுதி அடிப்படையில்)
  • மதியம் 12:50 முதல் - மகளிர் எப்பி அரையிறுதி (தகுதி அடிப்படையில்)
  • பிற்பகல் 2:50 முதல் - ஆடவர் ஃபாயில் இறுதிப்போட்டி (தகுதி அடிப்படையில்)
  • பிற்பகல் 3:50 முதல் - மகளிர் எப்பி இறுதிப்போட்டி (தகுதி அடிப்படையில்)

கனோ ஸ்பிரிண்ட்:

  • காலை 6:30 - ஆடவர் கயாக் இரட்டையர் 500 மீ அரையிறுதி 1: புரோஹித் பரோய், பிரசன்ன குமார்
  • காலை 6:50 - மகளிர் கனோ இரட்டையர் 500 மீ அரையிறுதி 1: மேகா பிரதீப், நேஹா தேவி
  • காலை 7:50 - ஆடவர் கயாக் இரட்டையர் 500 மீ இறுதிப்போட்டி-பி (தகுதி அடிப்படையில்)
  • காலை 8:00 - ஆடவர் கயாக் இரட்டையர் 500 மீ இறுதிப்போட்டி-ஏ (தகுதி அடிப்படையில்)
  • காலை 8:10 - மகளிர் கயாக் நால்வர் 500 மீ இறுதிப்போட்டி-ஏ: தனமஞ்சூரி தேவி, பூஜா, சோனியா தேவி, பார்வதி கீதா
  • காலை 8:30 - மகளிர் கனோ இரட்டையர் 500 மீ இறுதிப்போட்டி-ஏ (தகுதி அடிப்படையில்)

நீச்சல்:

  • காலை 6:40 - ஆடவர் 50 மீ பிரஸ்ட்ஸ்ட்ரோக் ஹீட்ஸ்: தனுஷ் சுரேஷ்
  • காலை 6:58 - ஆடவர் 200 மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸ்: ரிஷப் தாஸ், உத்கர்ஷ் பாட்டீல்
  • காலை 7:10 - ஆடவர் 400 மீ ஃப்ரீஸ்டைல் ஹீட்ஸ்: தக்ஷன் சசிகுமார், அனீஷ் கவுடா
  • காலை 7:36 - ஆடவர் 200 மீ பட்டர்பிளை ஹீட்ஸ்: சஜன் பிரகாஷ்
  • பிற்பகல் 1:35 - ஆடவர் 50 மீ பிரஸ்ட்ஸ்ட்ரோக் இறுதிப்போட்டி (தகுதி அடிப்படையில்)
  • பிற்பகல் 1:55 - ஆடவர் 200 மீ பேக்ஸ்ட்ரோக் இறுதிப்போட்டி (தகுதி அடிப்படையில்)
  • பிற்பகல் 2:22 - ஆடவர் 400 மீ ஃப்ரீஸ்டைல் இறுதிப்போட்டி (தகுதி அடிப்படையில்)
  • பிற்பகல் 2:51 - ஆடவர் 200 மீ பட்டர்பிளை இறுதிப்போட்டி (தகுதி அடிப்படையில்)

சர்பிங்:

  • அதிகாலை 4:17 - மகளிர் ஷார்ட்போர்டு முதல் சுற்று: சுகர் சாந்தி கயேன்
  • அதிகாலை 5:03 - மகளிர் ஷார்ட்போர்டு முதல் சுற்று: கமலி பிரகாஷ்
  • காலை 7:20 - ஆடவர் ஷார்ட்போர்டு முதல் சுற்று: கிஷோர் குமார் அன்பரசு
  • காலை 9:15 - ஆடவர் ஷார்ட்போர்டு முதல் சுற்று: சிவராஜ் பாபு
  • காலை 9:39 முதல் - மகளிர் ஷார்ட்போர்டு 2-வது சுற்று ஹீட்ஸ்: சுகர் சாந்தி கயேன், கமலி பிரகாஷ்

இ-ஸ்போர்ட்ஸ்:

  • காலை 7:55 - போக்கிமான் யுனைட் குழு-சி: இந்தியா vs தென் கொரியா
Story first published: Friday, September 25, 2026, 7:10 [IST]
Other articles published on Sep 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+