Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asian Games 2026: துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கம்.. வெள்ளி வென்றார் ஹிமான்ஷு; ருத்ராங்ஷ் வெண்கலம்

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதல் களத்தில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பதக்கங்கள் கிடைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் வெள்ளிப் பதக்கத்தையும், ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் தொடக்கம் முதலே முதலிடத்தில் நீடித்து தங்கப் பதக்கத்தை நோக்கி நகர்ந்தார். ஆனால், கடைசி சில சுற்றுகளில் சீனாவின் ஷென் லிஹாவோ அசுர வேகத்தில் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

Asian Games 2026 Double Medal In Shooting Himanshu Dhillon Wins Silver Rudrankksh Patil Takes Bronze

கடைசி நேரத்தில் ருத்ராங்க்ஷ் சுட்ட ஒரு குறி 9.7 புள்ளிகள் என சற்றே குறைந்ததால், அவர் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதேநேரம் இறுதிவரை நிதானமாக இலக்குகளைத் தாக்கிய மற்றொரு இந்திய வீரரான ஹிமான்ஷு தில்லான் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

முன்னதாக இன்று காலை நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் குழுப் பிரிவிலும் ருத்ராங்க்ஷ், ஹிமான்ஷு கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. மேலும், இன்று காலை பெண்களுக்கான பாரம்பரிய எம்.எம்.ஏ விளையாட்டில் சுச்சிகா தரியால் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார்.

வெண்கலம் வென்றும் கதறி அழுத இந்திய MMA வீராங்கனை சுச்சிகா.. ஆசிய விளையாட்டில் சர்ச்சை

வெண்கலம் வென்றும் கதறி அழுத இந்திய MMA வீராங்கனை சுச்சிகா.. ஆசிய விளையாட்டில் சர்ச்சை

நேற்று துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணி மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகியோர் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தனர். தற்போது ஒரே போட்டியில் மேலும் 2 பதக்கங்களை அள்ளியதன் மூலம் 3-வது நாளில் இந்தியாவின் பதக்கக் கணக்கு ஆறாக உயர்ந்து இருக்கிறது. இந்தியா 4 வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் வென்று இருக்கிறது.

வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைக்க வாய்ப்பு.. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பெருமை

Also Read

வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைக்க வாய்ப்பு.. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பெருமை
Story first published: Monday, September 21, 2026, 10:01 [IST]
Other articles published on Sep 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+