Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீராங்கனை இளவேனில் சாதனை.. நூலிழையில் தங்கம் மிஸ்.. ஆசிய விளையாட்டில் ஒரே நாளில் 2 வெள்ளி

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் பதக்கக் கணக்கு மேலும் உயர்ந்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் துப்பாக்கி சுடுதல் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நடப்பு தொடரில் இந்தியாவுக்கு 2-வது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இளவேனில் வாலறிவன் தொடக்கம் முதலே அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். மொத்தம் சுடப்பட்ட 24 சுற்றுகளில், முதல் 20 சுற்றுகள் வரை அவரே முதலிடத்தில் நீடித்து ஆதிக்கம் செலுத்தினார்.

Asian Games 2026 Elavenil Valarivan Narrowly Misses Gold Creates History With 2 Silver Medals In A Single Day

ஆனால் கடைசி சில சுற்றுகளில் உள்ளூர் வீராங்கனையான ஜப்பானின் ஹினாட்டா தாய்ச்சி அதிரடியாக முன்னேறினார். அவர் 253 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இளவேனில் வாலறிவன் வெறும் 0.6 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கத்தை நழுவவிட்டு, 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தென் கொரிய வீராங்கனை பான் ஹியோஜின் வெண்கலப் பதக்கம் வென்றார்.

தங்கம் கைநழுவினாலும், ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் சாதனையை இளவேனில் படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய ஆடவர் அல்லது மகளிர் பிரிவில் எவரும் இதில் தனிநபர் பதக்கம் வென்றதில்லை.

2026 ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை வென்ற இந்தியா.. துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணி வெள்ளி

2026 ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை வென்ற இந்தியா.. துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணி வெள்ளி

முன்னதாக செப்டம்பர் 20 அன்று காலை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவிலும் சோனம் மஸ்கர், விதர்சா வினோத் ஆகியோருடன் இணைந்து இளவேனில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வெள்ளிப் பதக்கங்களை அள்ளிக்குவித்து தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.

Story first published: Sunday, September 20, 2026, 11:50 [IST]
Other articles published on Sep 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+