Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய போட்டி: மகளிர் துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது

ஐச்சி-நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் துப்பாக்கிச் சுடுதல் குழு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மகேஸ்வரி சவுகான், பரினாஸ் தலிவால் மற்றும் ராய்சா தில்லான் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் குழு, மகளிர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெல்லும் 8-வது பதக்கம் இதுவாகும்.மூன்று நாட்கள் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டங்களின் முடிவில், மகேஸ்வரி, பரினாஸ் மற்றும் ராய்சா ஆகிய மூவரும் இணைந்து மொத்தம் 331 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். இப்போட்டியில் சீனா 357 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தான் 336 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றின.

Asian Games 2026-

ஆசிய விளையாட்டுப் போட்டியின் சாஃப்ட் டென்னிஸ் வரலாற்றில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை உறுதி செய்து ஜே மீனா சாதனை படைத்துள்ளார். நகோயாவில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் சாஃப்ட் டென்னிஸ் காலிறுதி ஆட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஷெர்வின் நுகுயிட்டுடன் ஜே மீனா மோதினார்.

ஆசிய போட்டியில் தங்கம்.. தமிழக கிரிக்கெட் வீராங்கனைக்கு 75 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்

ஆசிய போட்டியில் தங்கம்.. தமிழக கிரிக்கெட் வீராங்கனைக்கு 75 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த 7 கேம்கள் கொண்ட ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் ஜே மீனா வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்குப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாஃப்ட் டென்னிஸ் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

ஆசிய போட்டி பதக்கப் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்? முதல் இடம் யாருக்கு?

Also Read

ஆசிய போட்டி பதக்கப் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்? முதல் இடம் யாருக்கு?

தனது மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடும் ஜே மீனா, முன்னதாக குரூப் டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானின் அரெய்ன் உசேனை 4-0 என்ற நேர் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தார். இதற்கு முன்பு 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஜே மீனா பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 23, 2026, 9:45 [IST]
Other articles published on Sep 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+