Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு 2026.. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3வது வெள்ளி.. ருத்ராங்க்ஷ், ஹிமான்ஷு சாதனை

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதல் களத்தில் இருந்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. நேற்று துப்பாக்கி சுடுதலில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் இரண்டு வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஹிமான்ஷு தில்லான் மற்றும் பார்த்த் மானே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1890.1 புள்ளிகள் குவித்து 2-வது இடத்தைப் பிடித்தது. இப்போட்டியில் 1899 புள்ளிகள் குவித்த சீன அணி புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. தென் கொரிய அணி 1884.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

Asian Games 2026 India Wins 3rd Silver Medal In Shooting Rudrankksh Patil Himanshu Dhillon Excel

குழுப் பிரிவில் வெள்ளி வென்றதோடு மட்டுமின்றி, தனிநபர் பிரிவிலும் இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளனர். உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் 631.8 புள்ளிகள் குவித்து தகுதிச் சுற்றில் 3-வது இடத்தைப் பிடித்து கம்பீரமாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு இந்திய வீரரான ஹிமான்ஷு தில்லான் 630.0 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பார்த்த் மானே 628.3 புள்ளிகளுடன் 11-வது இடத்தைப் பிடித்தார். ஒரு நாட்டிலிருந்து இருவர் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற விதியால் பார்த்த் மானே வாய்ப்பை இழந்தார்.

ஆசிய விளையாட்டு 2026 செப். 21 இந்தியா ஆடும் போட்டிகள் பட்டியல்.. தங்கம் வெல்ல வாய்ப்பு இருக்கு!

ஆசிய விளையாட்டு 2026 செப். 21 இந்தியா ஆடும் போட்டிகள் பட்டியல்.. தங்கம் வெல்ல வாய்ப்பு இருக்கு!

ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டி செப்டம்பர் 21 அன்று காலை 9:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ருத்ராங்க்ஷ் மற்றும் ஹிமான்ஷு ஆகிய இரு இந்திய வீரர்கள் களமிறங்குவதால், இந்தியாவுக்கு நிச்சயம் தங்கம் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Monday, September 21, 2026, 7:53 [IST]
Other articles published on Sep 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+