Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வில்வித்தையில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி.. சீனாவை வீழ்த்தி உலக சாதனையை சமன் செய்து தங்கம்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. அடுத்தடுத்து 10 புள்ளிகளை குவித்து உலக சாதனையை சமன் செய்த இந்திய வீராங்கனைகள், தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வில்வித்தை மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், சிகிதா தானிபர்த்தி மற்றும் பிரித்திகா ஆகியோர் அடங்கிய கூட்டணி, சீனாவின் வூனியர், யு வாங், ஃபாங்யாவோ வெய் கூட்டணியை எதிர்கொண்டது. தொடக்கத்திலிருந்தே இந்திய வீராங்கனைகள் அபாரமாக அம்புகளை எய்து புள்ளிகளை குவித்தனர். முதல் சுற்றிலேயே சிகிதா, பிரித்திகா, ஜோதி சுரேகா ஆகியோர் துல்லியமாக 10 புள்ளிகளை குவித்து 60-58 என முன்னிலை பெற்றனர்.

Asian Games 2026 India Wins Gold in Archery Indian Women s Compound Team Defeats China and Equals World Record

2வது சுற்றிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 119-116 என முன்னிலையை நீட்டித்தது. 3வது சுற்றில் சீன வீராங்கனைகள் நெருக்கடி கொடுத்த போதும், சிறிதும் பதற்றமடையாத இந்திய வீராங்கனைகள் மீண்டும் 10 புள்ளிகளை குவித்து 178-175 என முன்னிலையை தக்கவைத்துக் கொண்டனர்.

தங்கத்தை தீர்மானிக்கும் 4வது மற்றும் கடைசி சுற்றில் சீன வீராங்கனைகள் இரண்டு முறை 9 புள்ளிகளை எடுத்து சறுக்கினர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய இந்திய வீராங்கனைகள் சிகிதா, பிரித்திகா மற்றும் ஜோதி சுரேகா ஆகிய மூவரும் தொடர்ந்து அடுத்தடுத்து அனைத்து அம்புகளையும் மிகத் துல்லியமாக 10 புள்ளிகளுக்குள் செலுத்தி இலக்குகளைத் தாக்கினர்.

உலக சாதனை சமன் - தங்கம் வென்ற இந்தியா

இறுதியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியதோடு, உலக சாதனையையும் சமன் செய்து புதிய வரலாறு படைத்தது. ஹாங்சோ ஆசிய போட்டியில் தங்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த அனுபவ வீராங்கனை ஜோதி சுரேகா, இளம் வீராங்கனைகளான சிகிதா மற்றும் பிரித்திகாவை வழிநடத்தி இந்த வரலாற்று தங்கத்தை சாத்தியமாக்கியுள்ளார்.

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விழுந்த அடி.. சதம் அடித்த வீரர் விலகல்.. என்ன நடந்தது?

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விழுந்த அடி.. சதம் அடித்த வீரர் விலகல்.. என்ன நடந்தது?

பலமான சீனாவை வீழ்த்தி தங்கத்தை தட்டிய இந்திய மகளிர் வில்வித்தை அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மற்றுமொரு போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்திய தென் கொரிய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

Story first published: Wednesday, September 30, 2026, 7:48 [IST]
Other articles published on Sep 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+