Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வில்வித்தையில் ஒரே நாளில் 2வது தங்கம்.. ஆசிய விளையாட்டில் சிகிதா, சாஹில் ஜோடி அபாரம்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் இந்தியா தனது தங்க வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. மகளிர் அணிகள் பிரிவில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி தென் கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 தங்கப் பதக்கங்களை குவித்து இந்திய வில்வித்தை அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

நகோயாவில் உள்ள ஒகசாகி மைதானத்தில் நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியாவின் சிகிதா தானிபர்த்தி - சாஹில் ராஜேஷ் ஜாதவ் ஜோடி, தென் கொரியாவின் ஜங்யூன் பார்க் - யோங்ஹீ சோய் ஜோடியை எதிர்கொண்டது.

Asian Games 2026 India Wins Gold in Compound Mixed Archery Chikitha and Sahil Jadhav Defeat South Korea in Thrilling Shoot-Off

ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய வீரர்கள் அற்புதமாக அம்புகளை எய்து 40-க்கு 40 புள்ளிகளை குவித்து முன்னிலை பெற்றனர். 2வது சுற்றின் முடிவில் இந்திய அணி 80-78 என முன்னிலையை தக்கவைத்தது. 3வது சுற்றில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் 118-117 என இடைவெளி குறைந்தது. 4வது சுற்றின் முடிவில் தென் கொரியா அபாரமாக 10 புள்ளிகளை குவித்து போட்டியை 157-157 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது. வெற்றியாளரை தீர்மானிக்க நடைபெற்ற கூடுதல் ஷூட்-ஆஃப் சுற்றில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

இந்தியாவின் சார்பில் முதலில் அம்பு எய்த சிகிதா துல்லியமாக 10 புள்ளிகளை எடுத்தார். தென் கொரிய வீராங்கனையும் 10 புள்ளிகளை எடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய இந்திய வீரர் சாஹில் ஜாதவ் பதற்றமின்றி 10 புள்ளிகளை குறிபார்த்து அடித்தார். ஆனால் தென் கொரிய வீரர் சோய் 9 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

Asian Games 2026

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி, தாய்லாந்து அணியை 156-155 என்ற புள்ளிக் கணக்கில் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

"விராட் கோலி மீது சிலருக்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் ஓய்வு பெற்றார்..".. முகமது கைஃப் பேச்சு

சிகிதாவின் இரட்டைத் தங்கம் - 2028 ஒலிம்பிக் வாய்ப்பு

இந்திய வீராங்கனை சிகிதா தானிபர்த்திக்கு இது ஒரே நாளில் கிடைக்கும் 2வது தங்கப் பதக்கமாகும். காலையில் மகளிர் அணிகள் பிரிவிலும், தற்போது கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த இரட்டை வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரின் காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் இந்திய கலப்பு ஜோடி நேரடியாக தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Story first published: Wednesday, September 30, 2026, 10:03 [IST]
Other articles published on Sep 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+