Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4x400 மீ ஆடவர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்.. தங்கம் வென்று மிரட்டிய ஜப்பான்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் ஆடவர் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி போராடி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. இந்த சீசனில் தனது சிறந்த நேரத்தை பதிவு செய்த இந்திய ஆடவர் அணி, 3வது இடத்தை பிடித்து பதக்கப் பட்டியலில் இணைந்தது. ஆடவர் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 5வது லேனில் இருந்து களமிறங்கியது.

இந்தியாவின் சார்பில் தரம்வீர் சவுத்ரி, மனு தீக்கினில், ஜெய் குமார் மற்றும் தமிழகத்தின் விஷால் தென்னரசு ஆகிய நான்கு வீரர்கள் சீறிப்பாய்ந்து ஓடினர். இந்திய வீரர்கள் பந்தய தூரத்தை 3:01.61 நிமிடங்களில் கடந்து இந்த ஆண்டில் தங்களது சிறந்த நேரத்தை பதிவு செய்தனர்.

Asian Games 2026 Indian Men s 4x400m Relay Team Wins Bronze with Season s Best Time Japan Claims Gold

போட்டி நடத்தும் நாடான ஜப்பான் அணி 3:00.75 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. கத்தார் அணி 3:00.93 நிமிடங்களில் வந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது. தங்கம் வென்ற ஜப்பான் அணியை விட வெறும் 0.86 வினாடிகள் மட்டுமே பின்தங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்.. 4x400 மீ மகளிர் அணி அபாரம்.. தமிழ்நாட்டின் வித்யா 3 பதக்கம்

தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்.. 4x400 மீ மகளிர் அணி அபாரம்.. தமிழ்நாட்டின் வித்யா 3 பதக்கம்

முன்னதாக மகளிர் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியிருந்த நிலையில், தற்போது ஆடவர் அணியும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய தடகளத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

Story first published: Tuesday, September 29, 2026, 18:22 [IST]
Other articles published on Sep 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+