Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வில்வித்தையில் ஹாட்ரிக் தங்கம்.. இந்தியா ஆண்கள் அணியும் வெற்றி.. ஆசிய விளையாட்டில் ஆதிக்கம்

நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 வில்வித்தையில் இந்தியா தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. மகளிர் அணிகள் பிரிவு மற்றும் கலப்பு அணிகள் பிரிவைத் தொடர்ந்து, ஆடவர் காம்பவுண்ட் அணிகள் பிரிவிலும் இந்திய அணி பலம் வாய்ந்த சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் வில்வித்தையில் தொடர்ந்து 3 தங்கப் பதக்கங்களை குவித்து இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

நகோயாவில் உள்ள ஒகசாகி மைதானத்தில் நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் இறுதிப்போட்டியில் இந்தியாவின் இளம் வீரர்கள் குஷால் தலால் (21 வயது), சாஹில் ஜாதவ் (25 வயது) மற்றும் கணேஷ் திருமூரு (20 வயது) அடங்கிய கூட்டணி சீனாவின் ஜியாவோ லியாவோ தலைமையிலான அணியை எதிர்கொண்டது.

Asian Games 2026 Indian Men s Compound Archery Team Defeats China to Secure Historic Hat-Trick Gold

ஆட்டத்தின் முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் இந்திய அணி 2 புள்ளிகள் பின்தங்கி இருந்தது. 3வது சுற்றில் இடைவெளியை ஒரு புள்ளியாக குறைத்தது.
தங்கத்தை தீர்மானிக்கும் 4வது மற்றும் கடைசி சுற்றில் சீன வீரர் ஜியாவோ லியாவோ முதல் அம்பிலேயே 8 புள்ளிகள் மட்டுமே எடுத்து சறுக்கினார்.

இதை மிகச் சரியாக பயன்படுத்திய இந்திய இளம் வீரர்கள் அடுத்தடுத்து சரமாரியாக 10, 10, 10, 10, 10, 10 என தொடர்ச்சியாக 10 புள்ளிகளை குவித்து மிரள வைத்தனர். இதனால் சீனா தனது கடைசி 3 அம்புகளை எய்வதற்கு முன்பாகவே இந்தியாவின் தங்கம் உறுதியானது. இறுதியில் இந்திய அணி சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

முன்னதாக காலையில் நடைபெற்ற அனல் பறந்த அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த தென் கொரிய அணியை 234-233 என்ற புள்ளிக் கணக்கில் வெறும் 1 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

இந்தப் போட்டியில் வென்ற மூன்று பேரும் இளம் வீரர்கள் ஆவர்.

குஷால் தலால் (21 வயது): தனது 13வது வயதில் வில்வித்தையைத் தொடங்கிய இவர், 2021 உலக யூத் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர். 2025 உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் வென்று தேசிய அணியில் இடம்பிடித்தார்.

கணேஷ் மணிரத்னம் திருமூரு (20 வயது): சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பிசிஏ படிக்கும் மாணவரான இவர், 10 வயதில் விளையாடத் தொடங்கினார். ஜூனியர் ஆசிய சாம்பியன் மற்றும் ஜூனியர் உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.

சாஹில் ஜாதவ் (25 வயது): உலக பல்கலைக்கழக போட்டிகளில் தனிநபர் தங்கம் வென்ற இவர், உலக சாம்பியன்களை வீழ்த்தி அசத்திய அனுபவம் கொண்டவர். இன்று காலையில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார்.

Asian Games: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று ஆசிய சாதனையையும் உடைத்த நீரு தண்டா - கைனன் செனாய்

Asian Games: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று ஆசிய சாதனையையும் உடைத்த நீரு தண்டா - கைனன் செனாய்

மகளிர் அணி, கலப்பு அணி மற்றும் ஆடவர் அணி என மூன்றிலும் தொடர்ந்து தங்கப் பதக்கங்களை தக்கவைத்து, ஆசிய வில்வித்தை அரங்கில் இந்தியாவிற்கு நிகர் இந்தியாவே என்பதை இந்த இளம் படை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது.

Story first published: Wednesday, September 30, 2026, 13:28 [IST]
Other articles published on Sep 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+