Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asian Games: இந்திய படகுப் போட்டி வீரர்கள் ஸ்ட்ரைக்.. கடைசி நேரத்தில் அணியை மாற்றியதால் அதிருப்தி

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய துடுப்புப் படகு அணியில் பெரும் குழப்பமும் மோதலும் வெடித்துள்ளது. போட்டிகள் தொடங்குவதற்கு வெறும் 2 நாட்களே உள்ள நிலையில், நிர்வாகம் தன்னிச்சையாக வீரர்களின் பிரிவுகளை மாற்றியதால் ஆத்திரமடைந்த இந்திய வீரர்கள், பயிற்சியைப் புறக்கணித்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

'துஜுவான்' புயல் காரணமாக செப்டம்பர் 20 அன்று தொடங்க வேண்டிய படகுப் போட்டிகள் செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. 5 நாட்கள் நடைபெற வேண்டிய போட்டிகள் வெறும் 2 நாட்களாக, செப்டம்பர் 23 மற்றும் 24க்குள் சுருக்கப்பட்டன. போட்டி நாட்கள் குறைந்ததால் வீரர்கள் சோர்வடைவதைத் தடுக்கவும், பதக்க வாய்ப்பை அதிகரிக்கவுமே கடைசி நேரத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக இந்திய படகோட்டுதல் சம்மேளனத் தலைவர் பாலாஜி மரடபா விளக்கம் அளித்துள்ளார்.

Asian Games 2026 Indian Rowing Team Threatens Strike Over Last-Minute Event Changes

ஆனால் இந்த விளக்கத்தை வீரர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதுகுறித்து வேதனையுடன் பேசிய வீரர்கள், "படகுப் போட்டியில் வீரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புதான் வெற்றிக்கு அடித்தளம். கடந்த 6 மாதங்களாக நாங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவில் இணைந்து இரவு பகலாகப் பயிற்சி எடுத்தோம். இப்போது போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு எந்த முன்னறிவிப்பும் இன்றி எங்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றினால் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும்?

வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், எங்களிடம் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு எங்களை மனதளவில் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பயிற்சி செய்யவே எங்களுக்கு விருப்பமில்லை" என்று கொதித்துள்ளனர்.

நவ்தீப் சிங், குல்விந்தர் சிங், சல்மான், சத்நாம், பல்ராஜ் பன்வார் மற்றும் அரவிந்த் சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இரட்டையர், நால்வர் மற்றும் ஒற்றையர் பிரிவுகளுக்கு இடையே திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே-வுக்கு தோனி போட்ட கட்டளை.. ஜாகீர் கான் பயிற்சியாளராக வந்த காரணமே இதுதான்.. என்ன நடந்தது?

சிஎஸ்கே-வுக்கு தோனி போட்ட கட்டளை.. ஜாகீர் கான் பயிற்சியாளராக வந்த காரணமே இதுதான்.. என்ன நடந்தது?

போட்டி தொடங்கும் முன்பே இந்திய வீரர்கள் பயிற்சியில் பங்கேற்காமல் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துடுப்புப் படகு வீரர்களைச் சமாதானப்படுத்தி பயிற்சிக்கு அழைத்து வர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Story first published: Tuesday, September 22, 2026, 9:37 [IST]
Other articles published on Sep 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+