Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா 4 தங்கம்.. சீனா 132 வென்று எங்கேயோ நிக்குது.. 2026 ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியல்

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா வழக்கம்போல தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி 230 பதக்கங்கள் வென்று, அதில் 132 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது. மறுபுறம், இந்தியா 45 பதக்கங்களை வென்றிருந்தாலும், அதில் வெறும் 4 தங்கப் பதக்கங்கள் மட்டுமே உள்ளதால் பதக்கப் பட்டியலில் 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மொத்த பதக்கங்கள் இருந்தும் இந்தியா பின்தங்குவது ஏன்? சீனாவுக்கும் நமக்கும் இடையேயான மலையளவு இடைவெளி எதனால்?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 46 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 43 விளையாட்டுகளில் 469 தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிட்டு வருகின்றனர்.

தற்போதைய பதக்கப் பட்டியல் விவரம்:

  1. சீனா - 132 தங்கம், 53 வெள்ளி, 45 வெண்கலம் (மொத்தம் 230)
  2. ஜப்பான் - 41 தங்கம், 68 வெள்ளி, 63 வெண்கலம் (மொத்தம் 172)
  3. தென் கொரியா - 21 தங்கம், 26 வெள்ளி, 44 வெண்கலம் (மொத்தம் 91)
  4. உஸ்பெகிஸ்தான் - 12 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலம் (மொத்தம் 42)
  5. கஜகஸ்தான் - 9 தங்கம், 13 வெள்ளி, 23 வெண்கலம் (மொத்தம் 45)
  6. தாய்லாந்து - 9 தங்கம், 8 வெள்ளி, 12 வெண்கலம் (மொத்தம் 29)

12. இந்தியா - 4 தங்கம், 20 வெள்ளி, 21 வெண்கலம் (மொத்தம் 45)

Asian Games 2026 Medal Tally Why India Ranks 12th in Asian Games 2026 Despite Winning 45 Medals

பதக்கப் பட்டியலில் சீனா முதல் நாளிலிருந்தே மற்ற நாடுகளுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது. நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், துப்பாக்கி சுடுதல், படகுப் போட்டி, டேபிள் டென்னிஸ் என களமிறங்கிய அனைத்து விளையாட்டுகளிலும் தங்கத்தை அள்ளிக் குவித்து 132 தங்கங்களை தொட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக போட்டியை நடத்தும் ஜப்பான் 41 தங்கங்களுடனும், தென் கொரியா 21 தங்கங்களுடனும் உள்ளன. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே கூட தங்கப் பதக்க எண்ணிக்கையில் இமாலய இடைவெளி நிலவுகிறது.

இந்தியாவுக்கு ஏன் 12வது இடம்?

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியல் என்பது ஒரு நாடு வெல்லும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையை பார்த்தால், இந்தியா வென்றுள்ள 45 பதக்கங்கள் என்பது 5வது இடத்தில் உள்ள கஜகஸ்தானுக்கு (45) சமமாகவும், 4வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானை (42) விட அதிகமாகவும் உள்ளது. ஆனால் உஸ்பெகிஸ்தான் 12 தங்கங்களையும், தாய்லாந்து 9 தங்கங்களையும் வென்றுள்ளதால், வெறும் 4 தங்கங்களை மட்டுமே வைத்துள்ள இந்தியா 12வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

தங்கமாக மாறாத 20 வெள்ளிப் பதக்கங்கள்!

இந்த ஆசிய போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய பின்னடைவு என்னவென்றால், பல இறுதிப்போட்டிகளில் தங்கம் வெல்லும் வாய்ப்பு நூலிழையில் தவறியதுதான். இந்தியா வென்றுள்ள 20 வெள்ளிப் பதக்கங்களில் பெரும்பாலானவை தங்கமாக கிடைத்து இருக்க வேண்டியது. ஆனால், போட்டியின் கடைசி வினாடியில் அவை கைநழுவின.

துப்பாக்கி சுடுதலில் இஷா சிங் கூடுதல் ஷூட்-ஆஃப் சுற்றில் 3-2 என போராடி நூலிழையில் தங்கத்தை நழுவவிட்டார். 1500 மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங் வெறும் 0.37 வினாடியில் தங்கத்தை தவறவிட்டார். நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் காயம் காரணமாக வெள்ளியுடன் முடித்தார். ஈட்டி எறிதலிலும் யாஷ்வீர் சிங் துவக்கத்தில் முதல் இடத்தில் இருந்தாலும் பின்னர் இரண்டாம் இடத்துக்கு சென்று வெள்ளிப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது.

இந்த 20 வெள்ளிப் பதக்கங்களில் சரிபாதி தங்கமாக மாறியிருந்தால் கூட, இந்தியா 14 தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் கம்பீரமாக நுழைந்திருக்கும்.

"இந்த ஒரு சாதனையை மட்டும் செய்தால் விராட் கோலி சச்சினுக்கு சமம் என.." அஸ்வின் ஓபன் டாக்

தடகளம், குத்துச்சண்டை அரையிறுதி ஆட்டங்கள், ஆடவர் கிரிக்கெட், ஹாக்கி மற்றும் தொடர் ஓட்டப் போட்டிகள் இன்னும் பாக்கி உள்ளன. இந்த இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் வெள்ளிக்கு பதிலாக தங்கத்தை குறிவைத்து அடித்தால் மட்டுமே, இந்தியா முதல் 10 இடங்களுக்குள் முன்னேற முடியும். இறுதிப் போட்டிகளில் ஏற்படும் பதற்றத்தை தவிர்த்து, வெள்ளிகளை தங்கமாக மாற்ற இந்திய வீரர்கள் உறுதியுடன் விளையாட வேண்டும்.

சிறையில் இருந்து வந்த 10 நாட்களில் வாய்ப்பு.. பெங்கால் கிரிக்கெட் அணியில் அபிஷேக் போரல் சேர்ப்பு!

Also Read

சிறையில் இருந்து வந்த 10 நாட்களில் வாய்ப்பு.. பெங்கால் கிரிக்கெட் அணியில் அபிஷேக் போரல் சேர்ப்பு!
Story first published: Tuesday, September 29, 2026, 8:10 [IST]
Other articles published on Sep 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+