Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய போட்டி 2026: பளுதூக்குதல் பிரிவில் முதல் வெள்ளியை வென்ற மீராபாய் சானு

ஐச்சி: இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் நட்சத்திரமான மீராபாய் சானு, 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ள சானுவுக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும்.

இதன் மூலம் ஆசிய அளவிலான இந்தத் தொடரில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியில் மீராபாய் சானு மொத்தம் 198 கிலோ எடையை ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

Mirabhai chanu

வடகொரியாவின் ரி சாங்-கும் மொத்தம் 215 கிலோ எடையை ஸ்னாட்ச் 94 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 121 கிலோ தூக்கி புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இந்தோனேசியாவின் லுலுக் டயானா திரி விஜயானா மொத்தம் 191 கிலோ ஸ்னாட்ச் 88 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 103 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய போட்டி பதக்கப் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்? முதல் இடம் யாருக்கு?

ஆசிய போட்டி பதக்கப் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்? முதல் இடம் யாருக்கு?

முன்னதாக, கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 32 வயதான இந்திய வீராங்கனை மீராபாய் சானு தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் கடுமையான போட்டி இருக்கும் என்பதை அறிந்து, அவர் தீவிர கவனத்துடன் தயாராகி வந்தார்.

இதற்கு முன்னதாக, 2023 ஹாங்க்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் நான்காம் இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்டிருந்த உடற்தகுதிப் பிரச்சினைகள் அவரது ஆட்டத்தை ஓரளவுக்கு பாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெள்ளிப் பதக்கத்தின் மூலம், மீராபாய் சானுவின் பதக்கப் பட்டியல் மேலும் பலம் பெற்றுள்ளது. அவர் ஏற்கனவே ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்கள், பல காமன்வெல்த் போட்டிகளின் பட்டங்கள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் ஆகியவற்றைத் தன் வசம் வைத்துள்ளார்.

ஆசிய போட்டி: மகளிர் துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது

Also Read

ஆசிய போட்டி: மகளிர் துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது

போட்டியின் போது, மீராபாய் சானு தனது ஸ்னாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் 83 கிலோ எடையைத் தூக்கினார். அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றிகரமாக 85 கிலோ மற்றும் 87 கிலோ எடையை தூக்கி இந்தப் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் அதிகபட்சமாக 111 கிலோ எடையைத் தூக்கி, கடந்த இரண்டு முறையும் நூலிழையில் தவறவிட்ட ஆசிய விளையாட்டு பதக்கக் கனவை தற்போது வெற்றிகரமாக நனவாக்கியுள்ளார்.

Story first published: Wednesday, September 23, 2026, 12:06 [IST]
Other articles published on Sep 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+