Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெள்ளி.. 64 ஆண்டு தங்கக் கனவு தகர்ந்தது.. நிதேஷ் போராடி தோல்வி

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரேக்க ரோமன் மல்யுத்தம் 97 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் நிதேஷ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த இறுதிப்போட்டியில் ஜப்பான் வீரரிடம் 0-4 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது. அதனால் ஆசிய போட்டியில் கிரேக்க ரோமன் பிரிவில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வெல்லும் இந்தியாவின் வரலாற்று கனவு நிறைவேறாமல் போனது.

நகோயாவில் நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் நிதேஷ் போட்டி ஜப்பானின் நட்சத்திர வீரர் யூரி நகாசடோவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் முதல் சுற்றிலிருந்தே ஜப்பான் வீரர் ஆக்ரோஷமாக செயல்பட்டு 2-0 என முன்னிலை பெற்றார். நிதேஷிற்கு புள்ளிகள் எடுக்கும் எந்தவித வாய்ப்பையும் தராமல் தற்காப்பு ஆட்டத்திலும் அவர் வலுவாக நின்றார்.

Asian Games 2026 Nitesh Wins Silver Medal in Wrestling at Asian Games 2026 64-Year Gold Wait Continues

2வது சுற்றிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய யூரி நகாசடோ, மேலும் 2 புள்ளிகளை எடுத்து 4-0 என முன்னிலையை விரிவுபடுத்தினார். நிதேஷ் புள்ளிகளைப் பெற தீவிரமாக முயன்ற போதிலும், ஜப்பான் வீரரின் கடுமையான பிடியை உடைக்க முடியவில்லை. ஆட்டத்தின் முடிவில் 0-4 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஜப்பான் வீரர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இறுதிவரை போராடிய இந்திய வீரர் நிதேஷ் வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றார்.

இப்படி ஒரு மேட்ச்சிலா அறிமுகம் ஆகணும்.. ஆகிப் நபி செய்த சொதப்பல்.. தேர்வுக்குழு மீது பாய்ந்த ஆரோன்

இப்படி ஒரு மேட்ச்சிலா அறிமுகம் ஆகணும்.. ஆகிப் நபி செய்த சொதப்பல்.. தேர்வுக்குழு மீது பாய்ந்த ஆரோன்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரேக்க ரோமன் மல்யுத்தத்தில் இந்தியா கடைசியாக கடந்த 1962 ஜாகார்த்தா ஆசிய போட்டியில் தங்கம் வென்றிருந்தது. அப்போது மால்வா (52 கிலோ பிரிவு) மற்றும் கண்பத் அந்தால்கர் (97+ கிலோ பிரிவு) ஆகியோர் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தனர்.

குல்தீப் யாதவ் செய்த தவறால் ஆகிப் நபிக்கு கிடைக்க வேண்டிய விக்கெட் வாய்ப்பு காலி.. என்ன நடந்தது?

Also Read

குல்தீப் யாதவ் செய்த தவறால் ஆகிப் நபிக்கு கிடைக்க வேண்டிய விக்கெட் வாய்ப்பு காலி.. என்ன நடந்தது?

அதன்பின்னர் கடந்த 64 ஆண்டுகளாக இந்தியா இந்த பிரிவில் தங்கம் வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

Story first published: Thursday, October 1, 2026, 17:01 [IST]
Other articles published on Oct 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+