Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்.. குராஷ் களத்தில் அசத்திய பிங்கி பல்ஹாரா

ஐச்சி: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குராஷ் 78 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி பல்ஹாரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஐச்சி மாகாண தற்காப்புக் கலை அரங்கில் நடைபெற்ற மகளிர் 78 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பிங்கி பல்ஹாரா, தென் கொரியாவின் முன்னணி வீராங்கனையான சுமின் மோவை எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென் கொரிய வீராங்கனை சுமின் மோ, சிறப்பான தற்காப்பு உத்திகளால் புள்ளிகளை குவித்தார். தொடக்கத்திலேயே பிங்கிக்கு நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சுமின் மோ சாலா மற்றும் யோன்போஷ் புள்ளிகளை எடுத்து முன்னிலை பெற்றார்.

Asian Games 2026 Pinki Balhara Wins Bronze Medal for India in Kurash

அடுத்தடுத்து எச்சரிக்கைகள் பெற்று தகுதிநீக்க அச்சுறுத்தலுக்கு உள்ளான பிங்கி பல்ஹாராவால் சுமின் மோவின் அதிரடி ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து புள்ளிகள் எடுக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் முடிவில் பிங்கி பல்ஹாரா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் பிங்கி பல்ஹாரா இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்றார். கடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த பிங்கி, இந்த ஆசிய போட்டியில் குராஷ் பிரிவில் இந்தியாவுக்கு முதல் மற்றும் ஒரே பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

குராஷ் என்றால் என்ன?

குராஷ் என்பது மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் தோன்றிய ஒரு பாரம்பரிய மல்யுத்த தற்காப்புக் கலை விளையாட்டு ஆகும். இது ஜூடோ மற்றும் மல்யுத்தத்தை ஒத்த விதிகளுடன் ஆடப்படுகிறது. இந்த விளையாட்டில் வீரர்கள் நின்ற நிலையில் மட்டுமே ஒருவரை ஒருவர் பிடித்து கீழே தள்ள அல்லது வீழ்த்த முயற்சிக்க வேண்டும்.

இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்.. ஆசிய விளையாட்டில் ஒரு பந்து கூட ஆடாமல் செமி பைனல் முன்னேற்றம்

இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்.. ஆசிய விளையாட்டில் ஒரு பந்து கூட ஆடாமல் செமி பைனல் முன்னேற்றம்

தரையில் படுத்து மல்யுத்தம் செய்யவோ அல்லது இடுப்புக்கு கீழே பிடித்து இழுக்கவோ இதில் அனுமதி கிடையாது. எதிராளியை முழுமையாக முதுகில் சாய்த்து வீழ்த்துவது, சாய்வாக வீழ்த்துவது ஆகியவற்றின் அடிப்படையில் சாலா, யோன்போஷ், காலத் போன்ற புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குராஷ் அதிகாரப்பூர்வ விளையாட்டாக சேர்க்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Story first published: Monday, September 28, 2026, 11:10 [IST]
Other articles published on Sep 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+