Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 ஆண்டு கால ஏக்கம் தீர்ந்தது.. ஆசிய விளையாட்டில் சீமா வரலாற்று வெண்கலம்.. தடகளத்தில் சாதனை

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில், இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இப்பிரிவில் 16 ஆண்டுகளுக்கு பின் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப்போட்டியில், சீமா பந்தய தூரத்தை 32:50.05 நிமிடங்களில் கடந்து 3-வது இடத்தைப் பிடித்தார். பஹ்ரைன் வீராங்கனை வின்ஃப்ரெட் யாவி 32:39.18 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் வீராங்கனை நோசோமி தனகா 32:41.54 நிமிடங்களில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர். 4-வது இடத்தைப் பிடித்த கஜகஸ்தான் வீராங்கனையை விட 13 வினாடிகள் முன்னதாகவே சீமா இலக்கைக் கடந்து அசத்தினார்.

Asian Games 2026 Seema Wins Historic Bronze in Women s 10 000m to End 16-Year Wait

இந்தப் பந்தயத்தின் தொடக்கத்தில் சீமா அசாத்திய வேகத்தை வெளிப்படுத்தினார். முதல் 2,000 மீட்டர் தூரம் வரை அவரே முதலிடத்தில் நீடித்து ஆதிக்கம் செலுத்தினார். பின்னர் பந்தயத்தின் நடுப்பகுதியில் மற்ற வீராங்கனைகள் வேகம் காட்டியதால் அவர் 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

SA vs AUS: பாகிஸ்தான் வீரரின் உலக சாதனையை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்க வீரர் ப்ரீட்ஸ்கே

SA vs AUS: பாகிஸ்தான் வீரரின் உலக சாதனையை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்க வீரர் ப்ரீட்ஸ்கே

எனினும் மனம் தளராமல் ஓடிய சீமா, கடைசி 1,000 மீட்டர் மீதமிருந்த போது தனது முழு பலத்தையும் திரட்டி சீறிப்பாய்ந்தார். எதிராளியைப் பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேறி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். நீண்ட தூர ஓட்டத்தில் சீமா காட்டிய இந்த அசாத்திய வீரம் இந்திய தடகள அரங்கில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Story first published: Thursday, September 24, 2026, 18:50 [IST]
Other articles published on Sep 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+