Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெண்கலம் வென்றும் கதறி அழுத இந்திய MMA வீராங்கனை சுச்சிகா.. ஆசிய விளையாட்டில் சர்ச்சை

நகோயா: இந்தியாவுக்கு 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 60 கிலோ பாரம்பரிய கலப்பு தற்காப்புக் கலை பிரிவில் இந்திய வீராங்கனை சுச்சிகா தரியால் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார். சுச்சிகா பதக்கம் வென்ற போதும், நடுவர்களின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் களத்திலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது ஆசிய விளையாட்டில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

சிங்கப்பூர் வீராங்கனை தியோ ஹூய் ஹூனுக்கு எதிராக நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டி தொடக்கம் முதலே உச்சக்கட்ட பரபரப்புடன் காணப்பட்டது. முதல் சுற்றில் சுச்சிகா முழங்கால் உதைகளை சரமாரியாக விட்டு, 2-வது நிமிடத்தில் எதிராளியைத் தரையில் தள்ளி பலத்த குத்துகளை விட்டார். முதல் சுற்று முடிந்த பிறகும் இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதால் நடுவர் தலையிட்டு பிரித்துவிட்டார்.

Asian Games 2026 Suchika Tariyal Wins Bronze In MMA Breaks Down In Tears Over Controversial Loss

2-வது சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனை சுச்சிகாவைத் தனது பிடியில் வைக்க முயன்றார். ஆனால் சுச்சிகா அதிலிருந்து சாதுரியமாகத் தப்பித்து, எதிராளியைத் திருப்பித் தாக்கி தனது பிடிக்குள் கொண்டு வந்தார்.
வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி 3-வது சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனை பலமுறை உதைத்தார். ஆனால் சுச்சிகா கடைசி வினாடிகளில் எதிராளியை அப்படியே தூக்கித் தரையில் சாய்த்து முழு ஆதிக்கம் செலுத்தினார். இறுதிப்போட்டிக்கு செல்லும் அளவுக்கு தான் சிறப்பாக செயல்பட்டுவிட்டதாகவே சுச்சிகா நம்பினார்.

வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைக்க வாய்ப்பு.. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பெருமை

வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைக்க வாய்ப்பு.. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பெருமை

ஆனால், நடுவர்கள் சிங்கப்பூர் வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாத சுச்சிகா, நடுவருடன் கைகுலுக்க மறுத்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். தங்கப் பதக்க வாய்ப்பு பறிபோன ஏமாற்றத்தில் களத்திலேயே மண்டியிட்டு அவர் தேம்பித் தேம்பி அழுத காட்சி காண்போரை உலுக்கியது.

Story first published: Monday, September 21, 2026, 9:33 [IST]
Other articles published on Sep 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+