ஆசிய விளையாட்டு துவக்க விழா…. நாடுகள் அறிமுகம்… இந்தியா சார்பாக நீரஜ் சோப்ரா கோடி ஏந்தினார்
பாலெம்பங் : ஆசிய போட்டிகள் தொடக்க விழாவில், இந்தியாவின் சார்பாக நீரஜ் சோப்ரா கொடி ஏந்தி அணிவகுத்து வந்தார்.
இந்தோனேசிய அதிபரின் வருகையை அடுத்து, நடனத்துடன் துவக்க விழா துவங்கியது. பிரம்மாண்டமான அரங்கில், அடுத்து ஒவ்வொரு நாடும் தங்கள் வீரர்கள் குழுவோடு அறிமுகம் செய்யும் நடைமுறை துவங்கியது. மொத்தம் 45 நாடுகள் இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

இதற்கான ஏற்பாடும், பிரம்மாண்டமாகவே இருந்தது. கூடவே, கலைநயத்துடனும்.
ஒவ்வொரு நாட்டின் முன்னும் இந்தோனேசிய அடையாளமான கருடனைப் போல இறக்கைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட பெண் சென்றார். அந்த இறக்கைகள் நடுவே அந்த நாட்டின் பெயர் எழுதப்பட்டு இருந்தது. மொத்தமாக ஆறாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
அடுத்து ஆங்கில எழுத்து வரிசைப்படி நாடுகள் அறிமுகம் தொடங்கியது. ஆப்கன், பக்ரைன், பங்களாதேஷ், பூட்டான், ப்ருனெய் தருசலம், கம்போடியா, சீனா, ஹாங்காங், இந்தியா, இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் இரான், ஜப்பான், ஜோர்டான், கஜகஸ்தான், ஒருங்கிணைந்த கொரியா, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு சீனா, மலேசியா, மாலத்தீவு, மொங்கோலியா, மியான்மர், நேபால், ஓமன், பாகிஸ்தான், பாலஸ்தீன், பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, சிரியா, சைனீஸ் தைபெய், தஜிகிஸ்தான், தாய்லாந்து, திமோர் லெஸ்தே, டர்க்மெனிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் ஆகிய நாடுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இறுதியாக போட்டியை நடத்தும் இந்தோனேசியா பெரிய கைதட்டலுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நாடுகள் அறிமுகத்தில், இந்தியா சார்பாக காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கொடியேந்தி முன்னே செல்ல, நம் இந்திய வீரர்கள் அவரை பின்தொடர்ந்தனர்.
இந்தியா, சீனா, லாவோஸ், ஹாங்காங், ஜப்பான், மலேசியா, மக்காவு சீனா, சைனீஸ் தைபெய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் வருகையின் போது பலத்த கைதட்டல் மற்றும் உற்சாகம் எழுந்தது.
Story first published: Saturday, August 18, 2018, 19:42 [IST]
Other articles published on Aug 18, 2018


Click it and Unblock the Notifications