ஆசிய விளையாட்டு தொடக்க விழா.. தெறிக்கவிட்ட இந்தோனேசிய அதிபர்.. பைக்கில் வந்து சாகசம்!
பாலெம்பங் : இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக தொடங்கின. மிகப்பெரிய மேடையில், வாய் பிளக்க வைக்கும் அலங்காரங்களோடு தொடங்கிய விழாவில் பிரம்மாண்ட நடனமும், இந்தோனேசிய அதிபரின் அதிரடி வருகையும் என கலக்கலாக இருந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா இன்று மாலை 5.3௦ மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கே ஒவ்வொரு நாட்டின் வீரர்களும் தங்கள் குழுவுடன் அறிமுகம் செய்யப்பட இருந்தனர். இந்தியா சார்பாக காமன்வெல்த் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கொடியேந்தி முன் செல்வார் என்ற செய்தி வந்தது.

இதையடுத்து, 5.40 மணிக்கு ஒருவர் பைக்கில், ஹெல்மெட் அணிந்து வருவதை ஒளிபரப்பினர். யார் அது என அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த போது, அரங்கிற்குள் பைக்கோடு உள்ளே நுழைந்தார் அவர். இந்தோனேசிய அதிபர் ஜோகோ விகோடோ தான் இப்படி பைக்கில் வந்தார் என தெரிந்ததும் அரங்கமே அதிர்ந்தது. எதிர்பார்க்காத இந்த அதிரடி மூலம் தொடங்கியது நிகழ்ச்சி.
இந்தோனேசிய அதிபர் மற்ற நாடு அதிபர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இருந்த இடத்திற்கு சென்று அவர்களை வரவேற்றார். அடுத்து சுமார் 1500 பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நடனம் நடைபெற்றது. பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது இது.
இந்தோனேசியா இப்போதே வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருக்கிறது என உறுதியாக கூறலாம். இதை அடுத்து ஒவ்வொரு நாட்டை சேர்ந்த வீரர்கள் குழு அறிமுகம் நடக்க உள்ளது.
Story first published: Saturday, August 18, 2018, 20:08 [IST]
Other articles published on Aug 18, 2018


Click it and Unblock the Notifications