லக்னோ: ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் ஏ. ஆர். ரஹ்மானின் ஜெய் ஹோ பாடல் இடம்பெறுகிறது.
சீனாவின் குவாங்ஸு நகரில் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பிரமாண்டமான முறையில் தொடக்க விழா நடைபெற்றது. நேற்று முதல் போட்டிகள் தொடங்கின. வரும் 27-ம் தேதி நிறைவு விழா நடக்கிறது.
அதில் ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலைப் பாட லக்னோவைச் சேர்ந்த இளம் பாடகர் ரவி கே. திருப்பதிக்கு அழைப்பு வந்துள்ளது. நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் ஒரே இந்திய கலைஞர் என்ற பெருமையைப் பெறுகிறார் ரவி.
இது குறித்து அவர் கூறியதாவது,
சீன பார்வையாளர்களுக்கு முன் பாடுவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இது எனக்கு கிடைத்த கௌரவம். இதை நான் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன். நான் ஜெய் ஹோ பாடலும், ஹென்ரியின் சீனப் பாடலும் பாடவிருக்கிறேன். அதற்காக நான் சீனா மொழியில் பாட பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன், என்றார்.
ரவி சீனாவில் பாடுவது இது முதல் முறையன்று.