ஆசிய விளையாட்டு போட்டி: 3வது நாளில் 6வது பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
இன்சியான், தென் கொரியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்றாவது நாளான இன்று இந்தியா தனது 6வது பதக்கத்தைப் பெற்றுள்ளது.
17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவும் கலந்து கொண்டு பதக்க வேட்டையில் தீவிரமாக உள்ளது.
அதன்படி, இன்று ஸ்குவாஷ் போட்டி மூலமாக இந்தியா 6வது பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒற்றையர் மகளிர் ஸ்குவாஷ் அரையிறுதிபோட்டியில் தீபிகா பல்லிகல் தோல்வியடைந்தார். இதனால் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
அதேபோல், 25 மீட்டர் துப்பாக்சிச் சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 6 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
Story first published: Monday, September 22, 2014, 14:20 [IST]
Other articles published on Sep 22, 2014


Click it and Unblock the Notifications