ஆசிய போட்டி பதக்கப் பட்டியல்.. 7வது நாள் முடிவில் இந்தியா பிடித்த இடம் எது?
ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் தற்போது ஏழு நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி 5 பதக்கங்களை கைப்பற்றியது.
ஸ்குவாஷில் தங்கம், துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி ,டென்னிசில் தங்கம்,பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கார்த்திக் குமாருக்கு வெள்ளி மற்றும் இந்தியாவின் மற்றும் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி மற்றும் ஜெஸ்வின் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி ஹாக்கியில் இந்திய அணி வெற்றி என பட்டையை கிளப்பி இருக்கிறது.

இதேபோன்று பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் 7 நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் யார் எவ்வளவு பதக்கங்களை வாங்கி இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். பதக்கப் பட்டியலில் சீனா 114 தங்கம் ,68 வெள்ளி 34 வெண்கலத்துடன் 216 பதக்கங்கள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.
ஜப்பான் 28 தங்கம், 38 வெள்ளி 39 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென்கொரியா 27 தங்கம், 29 வெள்ளி, 54 வெண்கலம் என 110 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 10 தங்கம் 14 வெள்ளி 14 வெண்கலத்துடன் 38 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் உஸ்பெகிஸ்தான் பத்து தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என 37 பதக்கத்துடன் உள்ளது.
ஆறாவது இடத்தில் தாய்லாந்து எட்டு தங்கம் 4 வெள்ளி, 14 வெண்கலம் என 26 பதக்கங்களை பெற்றிருக்கிறது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமையான நாளை இந்தியா 20 தங்கப் பதக்கத்திற்கு போட்டி போடுகிறது. தடகளப் போட்டியில் எட்டு தங்கம், கோல்பில் நான்கு பதக்கம் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் என 20 பதக்கங்கள் நாளை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications