Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என்னிடம் இருந்து தங்கம் பறிக்கப்பட்டது".. ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற சுச்சிகா தரியால் பேட்டி

நகோயா: ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், கலப்பு தற்காப்புக் கலை (MMA) பிரிவில் இந்தியாவுக்காக முதல்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த சுச்சிகா தரியால், நாடு திரும்பியதும் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நடுவர்களின் விசித்திரமான எடை விதிகளால் தனக்குக் கிடைக்க வேண்டிய தங்கப் பதக்கம் அநியாயமாகப் பறிக்கப்பட்டுவிட்டதாக அவர் பகிரங்கமாகத் குற்றம் சுமத்தி உள்ளார்.

ஆசிய விளையாட்டில் அரையிறுதியில் சுச்சிகா மற்றும் சிங்கப்பூர் வீராங்கனை ஹூ ஹூன் டியோ மோதினர். அந்தப் போட்டியில் சுச்சிகா தோல்வி அடைந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதனால் அவர் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்த தோல்வியை ஏற்காத அவரும், இந்திய கலப்பு தற்காப்பு கலை சங்கமும் மேல்முறையீடு செய்தனர். அதில் ஆட்டம் டிரா என முடிவு செய்யப்பட்டது. ஆனால், டை-பிரேக்கராக கூடுதல் சுற்று ஆட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டியோவை விட சுச்சிகா 700 கிராம் கூடுதல் எடையை கொண்டு இருப்பதால் மீண்டும் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெண்கலம் வென்று நாடு திரும்பினார் சுச்சிகா. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுச்சிகா, சிங்கப்பூர் வீராங்கனைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நடந்த குளறுபடிகளை வெளிப்படையாகப் பேசினார். "அந்தப் போட்டியில் நான் முழு ஆதிக்கம் செலுத்தினேன். ஆனால் நடுவர்கள் ஆட்டத்தை திடீரென டிரா என அறிவித்தனர். வெற்றியாளரைத் தீர்மானிக்க மற்றொரு சுற்று நடத்தியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, விசித்திரமான எடை விதிகளைப் புகுத்தி சிங்கப்பூர் வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவித்து எனது தங்கப் பதக்கக் கனவைச் சிதைத்துவிட்டனர்."

Asian Games MMA bronze medalist Suchika Tariyal alleges her gold medal was stolen due to unfair refereeing and weight rules


"ஆசிய சம்மேளனம் சிங்கப்பூரில் செயல்படுவதால் அந்நாட்டு வீராங்கனைக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். கூடுதலாக ஒரு சுற்று வைத்து அதில் நான் தோற்றிருந்தால் கூட மனதார ஏற்றிருப்பேன். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் வெற்றியயைப் பறித்ததை ஏற்க முடியாது" என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

தங்கப் பதக்கம் கைநழுவிப் போனாலும், தான் வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் தனது உயிரை விட மேலானது என்று சுச்சிகா குறிப்பிட்டார். இனி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
Story first published: Friday, September 25, 2026, 10:49 [IST]
Other articles published on Sep 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+