Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர்.. சாதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்

பெங்களூர்: 2025 ஆம் ஆண்டு ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த அகமதாபாத் நகரம் தயாராகி வருகிறது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த தொடர் நடைபெறுகிறது. இந்திய நீச்சல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட உலகத்தரம் வாய்ந்த நீச்சல் மையத்தில் எஇந்தப் போட்டி வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.

சீனா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற ஆசிய வல்லரசுகளுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா, பதக்க வெற்றிக்கு தனது டைவிங் வீரர்களை நம்பியுள்ளது. இந்தியாவை சேர்ந்த டைவிங் அணி மலேசியாவில் ஒரு மாத கால பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகிறது.

Asian swimming Championship

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஷானன் ராய் ஆடவர் சின்கோரசிங் டைவிங் அணியை மெருகேற்றி வருகிறார், இது இந்தியாவின் மிகவலுவான பதக்க வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்ட ஒரு போட்டி விசா பிரச்சினைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டாலும், மற்ற தொடரில் பங்கேற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதே போன்று வாட்டர் போலோவில், 25 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் கொண்ட விரிவான பயிற்சி முகாம் ஜனவரி முதல் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த குழுவிலிருந்து, ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு 14 முக்கிய வீரர்கள் மற்றும் நான்கு மாற்று வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இறுதி கட்ட பயிற்சிக்காக வாட்டர் போலோ பாரம்பரியம் கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் பயிற்சி நடைபெறும். முன்னாள் ஆசிய விளையாட்டு பயிற்சியாளர்களான பாபோவிக் மியோட்ராக் மற்றும் அன்டெரிக் நெமன்ஜா ஆகியோர் அணிகளை வழிநடத்த மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய சாம்பியன்ஷிப் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தகுதிச் சுற்றாகவும் உள்ளது. முதல் ஆறு அணிகள் இடம் பெறும்.

இந்தியா 1986 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் கடைசியாக வாட்டர் போலோவில் விளையாடியதைத் தொடர்ந்து, இம்முறை மீண்டும் தகுதி பெற தீவிரம் காட்டி வருகிறது. ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் பெனடிக்ஷன் ரோஹித், ஷோவன் கங்குலி மற்றும் ஆர்யன் நெஹ்ரா ஆகியோர் சமீபத்திய போட்டிகளில் நீச்சல் போட்டிகளில் ஜோலித்து வருகின்றனர்.

Story first published: Friday, June 27, 2025, 16:10 [IST]
Other articles published on Jun 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+